இன்னும் 2 நாள்தான்.. உதயநிதிக்கு பதவி கிடைக்குமா.. கிடைக்காதான்னு தெரிஞ்சுரும்
சென்னை: இன்னும் 2 நாள்தான்.. அதுக்கப்புறம் உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் அணி செயலாளர் பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவே கூறப்படுகிறது.
கருணாநிதிக்கு எப்பவுமே திருச்சி என்றால் ஒரு தனி சென்ட்டிமென்ட்.. எந்தவித முக்கிய அரசியல் அறிவிப்பாக இருந்தாலும் இங்கிருந்துதான் அறிவிப்பார். அப்படித்தான் உதயநிதிக்கும் நடந்து வருகிறது.
தேர்தல் ரிசல்ட் வந்தவுடனேயே உதயநிதிக்கு முக்கிய பதவியை தர வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் பேச ஆரம்பித்தனர். திருச்சி மாநாட்டில் இது பத்தின தீர்மானமே முன்னாள் அமைச்சர் நேரு முன்னிலையில் போடப்பட்டது.
வெள்ளக்கோவில் சாமிநாதன் விலகி விட்டாரா?

மேடையில் சீட்
இதன்பிறகு ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளும் உதயநிதிக்கு இளைஞர் அணி செயலாளர் பதவி தர வேண்டும் என்ற விருப்பத்தை கூறி வந்தனர். கடந்த 10-ம் தேதி திருச்சியில் திமுக சார்பாக முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் முக ஸ்டாலினுடன் உதயநிதியும் சபரீசனும் ஒரே மேடையில் அமர்ந்திருந்ததுதான் சிறப்பே!

வெள்ளக்கோயில் சாமிநாதன்
இதுவரைக்கும் கட்சியில் எந்தப் பதவியையும் உதயநிதி வகிக்காத நிலையில், மேடையில் உதயநிதிக்கும் ஒரு சீட் போடப்பட்டிருந்தது கவனிக்கத்தக்க ஒன்றுதான். இந்நிலையில் இதற்கெல்லாம் வசதியாக, இளைஞர் அணி பொறுப்பில் உள்ள வெள்ளக்கோயில் சாமிநாதன் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இது உதயநிதியின் அரசியல் வருகையை மேலும் ஊர்ஜிதப்படுத்தி உள்ளது.

சிங்கப்பூர் பயணம்
உதயநிதிக்கு புதிய பொறுப்பு என்ற விவகாரம் கடந்த ஒரு மாதமாகவே அதிகமாக பேசப்பட்டும், இது பற்றி வாயே திறக்காமல் உள்ளார் முக ஸ்டாலின். இப்போதைக்கு அவர் தனிப்பட்ட பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ளார். நாளை அல்லது நாளை மறு நாள் நாடு திரும்புவதாக தெரிகிறது. அதனால் அவர் வந்ததும், உதயநிதிக்கு இளைஞர் அணிச் செயலாளர் குறித்து முடிவெடுக்க நிறையவே வாய்ப்பு உள்ளதாக சொல்கிறார்கள்.

நாங்குநேரி
மேலும், நாங்குனேரி தொகுதியில் காங்கிரசுக்குப் பதில் திமுக போட்டியிட நேர்ந்தால், உதயநிதியை அங்கு களமிறக்கவும் யோசிக்கப்பட்டு வருகிறது. எப்படி இருந்தாலும், மிக முக்கிய பொறுப்புக்கும், முழுமையான அரசியலுக்கும் உதயநிதி களமிறங்க போவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டதால், அறிவாலயமே உற்சாகத்துடன் காணப்படுகிறதாம்!
-
"தூண்" ஸ்டாலின் இல்லாத இந்தியா கூட்டணி பலமா? அக்ரசிவ் அரசியலுக்கு மாறும் திமுக.. முழுசா மாறிய காங். -
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணும் திமுக? ஸ்டாலின் கைக்கு வரும் கள ஆய்வு குழு அறிக்கை -
இனிமே சிங்கப் பாதை தான்..ஆக்ஷனுக்கு ரெடியான அதிமுக! திமிறி எழுந்த எடப்பாடி பழனிசாமி! கையில் லிஸ்ட்! -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு! -
விஜய்க்கு அடுத்த அக்னி பரீட்சை.. அமைச்சர்களுக்கு முக்கிய அசைன்மென்ட்! இடைத் தேர்தலுக்கு ரெடியான தவெக -
கோவை மக்களுக்கு ஜாக்பாட்! பல மாத காத்திருப்புக்கு விடிவுகாலம்.. மெகா திட்டத்திற்கு கிரீன் சிக்னல்! -
இதெல்லாம் நம்ப மாட்டேன்.. ஸ்டாலின் 'டபுள் செக்' அதிரடி! திமுகவில் நடுங்கும் தலைகள்.. என்ன நடக்குது? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications