அப்பா.. கண்ணீர் விட்ட தமிழச்சி.. மகளை பார்த்து தாய் கதற.. தேற்ற முடியாமல் தங்கம் தென்னரசு திணற!
தந்தையின் சமாதியில் தமிழச்சி தங்கபாண்டியன் அஞ்சலி செலுத்தினார்.
Recommended Video
சென்னை: "எம்பி ஆயிட்டேன்.. இதை பார்க்க என் அப்பா இல்லையே".. என்று கண்ணீர் வடித்துள்ளார் தமிழச்சி தங்கபாண்டியன்!
எல்லாருக்குமே ரோல் மாடல் என்றால் அவரவர் அப்பாக்கள்தான் என்பது உலகறிந்த உணர்வுபூர்வ உண்மை. இது தமிழச்சி தங்கபாண்டியனுக்கும் நிறையவே பொருந்தும்.
வாரிசு அடிப்படையில் சீட் தரப்பட்டது என்ற விமர்சனங்களை எல்லாம் தாண்டி தெருத்தெருவாக வாக்கு சேகரித்தார் தமிழச்சி. தங்கபாண்டியன். கட்சியில் முக்கிய புள்ளியாக இருந்த தங்கபாண்டியனின் மகள், முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசுவின் அக்கா என்ற பந்தங்களை தாண்டி, பூமழை தூவி இவரை தொகுதி மக்கள் வரவேற்கவும் செய்தனர்.

அபார வெற்றி
20 வருடமாக இலக்கிய பணியில் தன்னை ஈடுபடுத்தி கொண்டாலும், தமிழச்சியின் அரசியல் வருகையும் தவிர்க்க முடியாத ஒன்றுதான். அதனால்தான் தென்சென்னையில் அபார வெற்றி பெற்றுள்ளார். இப்போது எம்பியாகவும் உயர்ந்துவிட்டார்.

அஞ்சலி
வெற்றிக்கு பிறகு தனது தந்தையின் நினைவிடத்துக்கு சென்றார் தமிழச்சி. சொந்த ஊர் விருதுநகரின் மல்லாங்கிணறுதான். அங்குள்ள தங்கபாண்டியனின் நினைவிடத்தில் குடும்பத்துடன் அஞ்சலி செலுத்தினார் தமிழச்சி.

கதறினார்
நினைவிடத்தை பார்த்ததும் தந்தையை பற்றி என்னவெல்லாம் அவருக்கு நினைவுக்கு வந்து போனதோ தெரியவில்லை.. கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது.. கதறி அழுவதை தவிர வேறு எந்தவகையிலும் தன் வெற்றியை தமிழச்சியால் பகிர முடியவில்லை.

ஆறுதல் சொன்ன அண்ணன்
மகளை பார்த்து தாயும் கதற, இருவரையும் தேற்ற முடியாமல் தங்கம் தென்னரசு திணற.. என்று அந்த சில நிமிடங்கள் நெகிழ்ச்சியும், கண்ணீருமாக கடந்தன. "பாசமாக வளர்த்தவர் இன்று நான் எம்பி ஆவதற்கு முன்னே இறந்துவிட்டாரே" என்ற தமிழச்சியின் சோகம் சுற்றி இருந்தவர்களையும் சூழ்ந்து கொண்டது!
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications