தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வழக்கு... தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைப்பு..!
சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது.
இந்நிலையில் அந்த வழக்கின் விவரம் பின்வருமாறு;
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கடந்த 2019 ஜூன் மாதம் நடந்த தேர்தலை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், சங்கத்தை நிர்வகிக்க தனி அதிகாரி நியமனம் செல்லும் என்று தீர்ப்பளித்தது. மேலும், மூன்று மாதத்தில் புதிதாக தேர்தலை நடத்த சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸை நியமித்தும் 2020 ஜனவரியில் உத்தரவிட்டார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து நடிகர் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடுகளை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, தேர்தல் செல்லாது என அறிவித்து மூன்று மாதத்திற்குள் புதிதாக தேர்தல் நடத்த வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத் தடைவிதித்தது.
இந்த வழக்கு நீதிபதி புஷ்பா சத்திய நாராயணா மற்றும் நீதிபதி முகமது ஷபீக் அமர்வு முன்பு கடந்த வாரம் விசராணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் ஓம்.பிரகாஷ் மற்றும் கபீர், கடந்த 2019ம் ஆண்டு ஜூன் 23 தேதி நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் 80 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும், அனைத்து வாக்கு பெட்டிகளும் வங்கி லாக்கரில் பாதுக்காப்பாக வைக்கபட்டுள்ளதாக தெரிவித்தனர்.
வாக்கு பெட்டிகளில் வைக்கபட்டுள்ள வாக்குகளை எண்ணி முடிவுவை அறிவிக்க உத்தரவிட வேண்டும் என தெரிவித்தனர். தேர்தல் நேர்மையான முறையில் நடைபெற்றுள்ளதாகவும், ஏற்கனவே தேர்தலுக்காக 35 லட்சம் செலவு செய்யபட்டுள்ளதாகவும், மீண்டும் புதிதாக தேர்தலை நடத்த சங்கத்தில் பணம் இல்லை என்பதால் வாக்கு எண்ணிக்கைக்கு அனுமதி அளிக்க வேண்டும் என வாதிட்டிருந்தார்
தமிழக அரசு சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், சிறப்பு அதிகாரி கீதாவின் பதவி காலம் நீட்டிக்கபட்டுள்ளதாகவும், அவர், சங்கத்தின் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கும் பணியை மட்டுமே மேற்கொண்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.
இன்று மீண்டும் விசாணைக்கு வந்தபோது ஏழுமலை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜேஷ், நடிகர் சங்க தேர்தல் நடத்தபட்டதில் பல்வேறு குளறுபடிகள் இருந்ததாகவும், சங்க உறுப்பினர்களின் இறுதி பட்டியலை உறுதிபடுத்தவில்லை எனவும், சென்னை மாவட்ட பதிவாளர் தயார் செய்த உறுப்பினர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிடவும், வாக்களிக்கவும் வேண்டும் என தெரிவித்தாக வாதிட்டார். எனவே நடிகர் சங்க உறுப்பினர்களின் பட்டியலை இறுதி செய்து புதிதாக தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் வழக்கின் மீதான தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications