மிஸ்ஸான தென்மேற்கு பருவமழை.. கிளம்பியது குடிநீர் தட்டுப்பாடு அபாயம்.. தமிழக அரசு இன்று முக்கிய ஆலோசனை
சென்னை: தென்மேற்கு பருவமழை குறைந்துள்ளதால், பல்வேறு மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.. இந்த தட்டுப்பாட்டை போக்க தமிழக அரசு அடுத்தக்கட்ட முயற்சியில் இறங்கி உள்ளது. இது தொடர்பான ஆலோசனையையும் இன்று மேற்கொள்ள உள்ளது.
வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், அதை சமாளிப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.. இந்த நடவடிக்கையை சென்னை மாநகராட்சி சில நாட்களுக்கு முன்பே தொடங்கியது.

சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், இது தொடர்பான ஆலோசனை கூட்டத்தை நடத்தியதுடன், சில முக்கிய அறிவுறுத்தல்களையும் அதிகாரிகளுக்கு வழங்கியிருந்தார்.
வடகிழக்கு பருவமழை: குறிப்பாக, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்ட ராதாகிருஷ்ணன், பழைய அனுபவங்களின் அடிப்படையில் பேரிடர் மேலாண்மையை சிறப்பாக மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தியிருந்தார். அதேபோல, மக்களுக்கு சிரமங்கள் ஏற்படாத வகையில் சிரமங்கள் ஏற்படாத வகையில் பணிகளை செய்ய வேண்டும், நீர்நிலைகளில் ஆகாய தாமரைகளை விரைந்து அகற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.
அதன்படியே, சென்னையில் கழிவுநீர் குழாய்களில் தூர்வாரும் பணி பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.. இந்நிலையில், தென்மேற்கு பருவமழை குறைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.. இந்த அபாயத்தை போக்கவே, தமிழக அரசு தயாராகி வருகிறது.
விவசாயம்: இந்த வருடம் தென்மேற்கு பருவமழை, தமிழகம் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களிலுமே குறைந்துவிட்டது.. இந்த மழைபொழிவுதான், விவசாயத்துக்கு அடிப்படையானது.. ஆனால் மழை குறைவால், பாசனம் மட்டுமின்றி குடிநீர் தேவையை சமாளிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.. இப்போதே, நிறைய மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு தலைதூக்க துவங்கிவிட்டது.. வடகிழக்கு பருவமழை ஏமாற்றினால் நிலைமை இன்னும் மோசமாகும்.
அதனால்தான், குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிப்பது குறித்து நீர்வளத்துறை, நகராட்சி நிர்வாகம் துறை, குடிநீர் வழங்கல் வாரிய அதிகாரிகள், இன்று ஆலோசனையை நடத்த உள்ளார்கள்.. நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு தலைமையில், தலைமைச் செயலகத்தில், இன்று இந்த ஆலோசனை கூட்டம் நடக்க போகிறது..
இன்று ஆலோசனை: நிலுவையில் உள்ள, 50க்கும் மேற்பட்ட கூட்டு குடிநீர் திட்ட பணிகளை விரைவுப்படுத்துவது குறித்து இதில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. அத்துடன், குடிநீர் பிரச்சனை ஏற்படாதவாறு, சில திட்டங்கள் கையில் எடுக்கப்படும் என்றும் தெரிகிறது.












Click it and Unblock the Notifications