வைகை, பல்லவன் ரயில்கள் ஆகஸ்ட் 1ல் ரத்து.. மாற்றுப்பாதையில் குருவாயூர்.. தென்னக ரயில்வே அறிவிப்பு
சென்னை: மதுரையில் இருந்து சென்னை எழும்பூருக்கு காலை 7.10 மணிக்கு புறப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் சென்னை எழும்பூரில் இருந்து காரைக்குடி செல்லும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் வருகிற ஆகஸ்ட் 1ஆம் தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தென்னக ரெயில்வே சார்பில் விடுத்துள்ள அறிக்கையில், திருச்சியில் இருந்து தஞ்சாவூர், மயிலாடுதுறை, திண்டுக்கல்லுக்கு இயக்கப்படும் பல்வேறு ரயில்கள் இன்று முதல் வருகிற 1ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன. கோவை-மயிலாடுதுறை ஜன் சதாப்தி விரைவு ரயில் இரு மார்க்கமும், வருகிற 30, 31ஆம் தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

திருச்சி பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் வைகை, பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் ஆகஸ்ட் 1ஆம் தேதி முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மதுரையில் இருந்து சென்னை எழும்பூருக்கு காலை 7.10 மணிக்கு புறப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் சென்னை எழும்பூரில் இருந்து காரைக்குடி செல்லும் பல்லவன் எக்ஸ்பிரஸ் வருகிற ஆகஸ்ட் 1ஆம் தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
நாகர்கோவில்-மும்பை விரைவு ரயில் ஆகஸ்ட் 30ஆம் தேதி திண்டுக்கல், கரூர், சேலம், ஜோலார்பேட்டை வழியாக இயக்கப்படும். ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி காட்ரா-திருநெல்வேலி விரைவு ரயில் நாளை முதல் வருகிற 30ஆம் தேதி வரை கரூர், திண்டுக்கல் வழியாக இயக்கப்படும். சென்னை எழும்பூர்-குருவாயூர் விரைவு ரயில் வருகிற 30ஆம் தேதி பெரம்பூர், ஜோலார்பேட்டை, சேலம், கரூர், திண்டுக்கல் வழியாகவும், ஆகஸ்ட் 1-ந் தேதி விருத்தாச்சலம், சேலம், திண்டுக்கல் வழியாகவும் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்னும் 450-ஐ கூட தொடவில்லை.. 717 டாஸ்மாக்கில் இதுவரை எத்தனை மூடப்பட்டுள்ளது? மந்தமான பணி? -
நான் அடிச்ச 10 பேருமே டானுங்க தான்.. தமிழக அரசியலை புரட்டிப் போட்ட விஜய்! சத்தமில்லாமல் தவெக சாதனை! -
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் காவல்துறை அதிகாரிகளுக்கு அவசர உத்தரவு -
இலவசம் அரசு பஸ்களில்.. இப்போ எங்கே தெரியுமா? நம்ம தமிழகத்தின் விடியல் பயணம்தான் இதில் பெஸ்ட் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
எரிஞ்சு விழக் கூடாது.. குணமா சொல்லனும்! ரேசன் கடை ஊழியர்களுக்குப் பறந்த உத்தரவு! ஸ்பாட்டில் அமைச்சர் -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
தாய்மாமன் என வசனம் பேசிய விஜய்.. குழந்தைகள் பாலியல் மிருகங்களிடம் சீரழிவதை வேடிக்கை பார்க்கிறாரா? -
இப்போ தான் ஆட்சிக்கு வந்துருக்கோம்னு.. சாக்கு போக்கு சொல்ல கூடாது! கரண்ட் மேட்டருக்கு வந்த எடப்பாடி -
கோவையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமியின் உடல்.. சொந்த ஊரில் தகனம்! -
தமிழகத்தில் 3 நாட்களில் 15,349 ரவுடிகளிடம் விசாரணை! போலீஸ் டிஜிபி பரபரப்பு தகவல்! -
தங்க நகை கடன் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் டாப் 5 தென் மாநிலங்கள்! தமிழகத்திற்கு எத்தனையாவது இடம்?












Click it and Unblock the Notifications