மாற்றி யோசித்த தெற்கு ரயில்வே.. 18 கோடி ரூபாய் லாபம் .. சென்னை டூ கன்னியாகுமரியில் சூப்பர் சம்பவம்
சென்னை: தெற்கு ரயில்வே மின்சார தேவைகளை குறைக்கவும், மின்சார பயன்பாட்டிற்கு மாற்று வழிகளை கையாளவும் முடிவு செய்து அதற்கான பணிகளில் ஈடுபட்ட வந்தது. அதன்படி ரயில்வேக்கு சொந்தமான காலி இடங்கள், ரயில் பாதை அருகில், ரயில் நிலையங்கள், ரயில்களின் மேற்கூரைகளில் சோலார் கருவிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில் மட்டுமே 18 கோடி ரூபாய் பணத்தை கடந்த ஆண்டு சேமித்துள்ளது. அதாவது தெற்கு ரயில்வேக்கு 18 கோடி லாபம் கிடைத்துள்ளது.
ரயில்வே மின்சாரத்தில் தான் இயங்குகிறது. பெரும்பாலான ரயில்களை மின்சாரத்தில் தான் இயக்குகிறது. அதற்கு அதிகப்படியான மின்சாரம் தேவை. ரயில்வே மின்சாரத்தை மின்வாரியம் மூலம் வாங்கினாலும் போதாது. அதற்கு கட்டணம், செலவு, திடீர் பிரச்சனை போன்றவை வரும். மக்கள் எப்படி சோலார் அமைத்து மின்சாரத்தை பயன்படுத்துகிறார்களோ, அதேபோல் ரயில்வேயும் கிடைக்கும் எல்லா இடங்களிலும் சோலார் அமைத்து மின்சாரத்தை சேமித்து வருகிறது. சோலார் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்து, அந்த மின்சாரத்தை பயன்படுத்துகிறது. இதன் மூலம் கோடிகளில் சேமித்து வருகிறது.

இந்திய ரயில்வே மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், ரயில்வேயின் இயக்கச் செலவுகளை மிச்சப்படுத்தி பசுமையான சுற்றுச்சூழலை உருவாக்கும் நோக்கத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை அதிகரிக்க கடந்த சில ஆண்டுகளாகவே தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, ரயில்வேக்கு சொந்தமான காலி இடங்கள், ரயில் பாதை அருகில், ரயில் நிலையங்கள், ரயில்களின் மேற்கூரைகளில் சோலார் கருவிகள் அமைக்கப்பட்டு வருகிறது.
இதேபோல, வாய்ப்புள்ள இடங்களில் காற்றாலைகளை நிறுவி மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்திய ரயில்வே நாடு முழுவதும் பல இடங்களில் காற்றாலைகள் நிறுவி வருகிறது. அந்தவகையில், 10.5 மெகாவாட் திறன் கொண்ட காற்றாலை மின்சாரம் உற்பத்தி வசதிகள் தெற்கு ரயில்வேயில் இருக்கிறது.
தமிழ்நாட்டில் கங்கை கொண்டான், திருச்சி, கடம்பூர், கயத்தாறு, நாகர்கோவில், கன்னியாகுமரி, சேலம், நாமக்கல், திருப்பூர், ஆரல்வாய்மொழி உள்பட பல்வேறு இடங்களில் காற்றாலைகள் நிறுவப்பட்டு உள்ளன. தெற்கு ரயில்வேயை பொறுத்தவரையில் காற்றாலை மின் உற்பத்தி திட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது.
இதன் மூலம் ஆண்டு தோறும் பல கோடி அளவிற்கு அலகு (யூனிட்) மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு, கோடி கணக்கான ரூபாய் சேமித்து வருகிறது. அந்தவகையில், தெற்கு ரயில்வேயில் நடப்பாண்டில் (2025-26) கடந்த மார்ச் மாதம் முதல் நவம்பர் மாதம் வரையில் 2.424 கோடி அலகு மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.17.87 கோடி சேமிக்கப்பட்டு உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் கூறினார்கள்.












Click it and Unblock the Notifications