சென்னை புறநகர் ரயில்களில் பெரிய மாற்றம்.. இனி ஜம்முன்னு போகலாம்.. தெற்கு ரயில்வே மேஜர் முடிவு
சென்னை: சென்னை புறநகர் ரயில்களில் ஏசி பெட்டிகளை இணைக்குமாறு சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் ரயில்வேக்கு பரிந்துரை செய்திருந்தது. எனவே இந்த பரிந்துரை அடிப்படையில் ஏசி பெட்டிகளை அடுத்த 6 மாதத்தில் புறநகர் ரயில்களில் இணைக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.
தற்போதையில் மும்பை புறநகர் ரயிலுக்கான ஏசி பெட்டிகள் சென்னை பெரம்பூர் ஐசிஎப் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் சென்னைக்கும் தயாரிக்கப்படும் என்று தெரிகிறது.

சென்னை புறநகர் ரயில்களில் ஏசி பெட்டிகளை இணைக்க வேண்டும் என்று பொதுமக்கள்நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். பலரும் மெட்ரோவில் பயணிக்கும் நிலையில், மெட்ரோ அல்லாத புறநகர் ரயில்களில் ஏசி பெட்டிகளை இணைத்தால் பலர் ஆர்வமுடன் புறநகர் ரயில்களில் பயணிக்க ஆர்வம் காட்டுவார்கள் என்றும், இதன் மூலம் ரயில்வேக்கு வருவாய் அதிகரிக்கும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இது தொடர்பாக சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமமும் பரிந்துரை செய்தது.
தற்போதைய நிலையில் சென்னை புறநகர் ரயில்களில் முதல் வகுப்பு, மகளிர், சாதாரண வகுப்பு என்று மூன்று வகையில் உள்ளது. முதல் வகுப்பில் கொஞ்சம் கட்டணம் கூடுதலாக இருக்கும். மற்ற வகுப்புகளில் ஒரே மாதிரி தான் உள்ளது.
சென்னை புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகளை இணைத்தால் ஐடி ஊழியர்கள், பெரிய நிறுவனங்களில் பணிபுரிவோர், வயதானவர்கள் என பலரும் கார்களில் செல்லாமல் புறநகர் ரயில்களில் பயணிப்பதை அதிகம் விரும்புவார்கள் என்றும் இதன் மூலம் கணிசமாக அதிகரிக்கும் என்று கூறப்பட்டது. இதை பரிசீலித்த தெற்கு ரயில்வே, சோதனை அடிப்படையில் சென்னை புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகளை இணைத்து இயக்க முடிவு செய்துள்ளது. அடுத்த ஆறு மாதத்தில் சென்னை புறநகர் ரயில்களில் ஏசி பெட்டிகளை காண முடியும். கட்டணம் அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது.
இது ஒருபுறம் எனில், சென்னை கடற்கரை வேளச்சேரி புறநகர் ரயில் வழித்தடத்தில் ஏசி ரயில்கள் இயக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் ஒரு தகவல் உலா வருகிறது. பரங்கிமலை முதல் வேளச்சேரி வழியாக கடற்கரை வரை ஏசி ரயில்கள் இயக்கப்படலாம் என்றும் சொல்கிறார்கள். தற்போதைய நிலையில் பரங்கிமலை வேளச்சேரி பறக்கும் ரயில் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. அடுத்த ஆண்டு முதல் பரங்கிமலை வேளச்சேரி இடையே பறக்கும் ரயில்கள் இயக்கப்படும் வாய்ப்பு உள்ளது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications