பயணிகளே தெரியாமல் போய் டிரெயினை விட்றாதீங்க.. நெல்லை, மதுரை புறப்படும் ரயில்களின் நேரம் மாற்றம்!
சென்னை: சென்னையில் இருந்து நெல்லை செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், மதுரை வைகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட சில ரயில்களின் புறப்படும் மற்றும் வருகை நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புத்தாண்டு முதல் புதிய அட்டவணைப்படி ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பயணிகள் மறக்காமல் புதிய அப்டேட் டைம் டேபிளை அறிந்து வைத்துக்கொள்ளுங்கள்.
ரயில்வே நாடு முழுவதும் உள்கட்டமைப்பு பணிகளை மேம்படுத்தி வருகிறது. அதேபோல, தண்டவாள சீரமைப்பு பணிகள், கூடுதல் வழித்தடங்கள் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு வருகிறது. இதுபோன்ற கட்டமைப்பு மாற்றங்களால் கூடுதல் ரயில்களை இயக்க முடியும்.

தென் மாவட்ட ரயில்கள்
அதுபோக, ரயில்கள் சிக்னல்களுக்கு காத்திருக்கும் நேரமானது குறையும். அதேபோல, கூடுதல் நிறுத்தங்களையும் சில ரயில்களுக்கு வழங்கப்படுகிறது. இதுபோன்ற காரணிகளை கருத்தில் கொண்டு ரயில்வே, அவ்வப்போது ரயில்கள் புறப்படும் நேரங்களை மாற்றியமைப்பதை பார்க்க முடிகிறது. இதில் சில ரயில்கள் சென்றடையும் நேரம் தாமதமாகவும் மாற்றப்படுகிறது.
அந்த வகையில், தென் மாவட்டங்களுக்கு செல்லும் சில முக்கிய ரயில்களின் புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே கூறியிருப்பதாவது:- சென்னை எக்மோரில் இருந்து நெல்லைக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. தென் மாவட்ட பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கக்கூடிய இந்த வந்தே பாரத் ரயிலில் சில நிறுத்தங்களுக்கான அட்டவணை மாற்றப்பட்டு இருக்கிறது.
புதிய அட்டவணை
புதிய அட்டவணைப்படி, வந்தே பாரத் ரயில் திருச்சிக்கு இரவு 7 மணிக்கும், திண்டுக்கலுக்கு 7.58 மணிக்கும், மதுரைக்கு 8.45 மணிக்கும், விருதுநகர் (9.20), கோவில்பட்டி (9.48) நெல்லைக்கு இரவு 11 மணிக்கு சென்றடையும். இதற்கு முன்பாக இரவு 10.30 மணிக்கு நெல்லைக்கு வந்தே பாரத் ரயில் சென்று கொண்டிருந்தது. தற்போது அரை மணி நேரம் ரயில் தாமதம் ஆகியுள்ளது.
சென்னை எழும்பூர்-மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் எக்மோரில் இருந்து பிற்பகல் 1.15 மணிக்கு புறப்பட்டு, திருச்சி 6.05 (மாலை)க்கு சென்றடையும். மதுரை இரவு 8.35 மணிக்கு சென்றடையும். இந்த ரயில் இதற்கு முன்பாக எக்மோரில் 1.45 மணிக்கு புறப்பட்ட நிலையில், தற்போது அரை மணி நேரம் முன்கூட்டியே மாற்றப்பட்டுள்ளது. மதுரைக்கு 9.20 மணிக்கு சென்றடைந்த நிலையில் இனிமேல் 8.35க்கே சென்றடையும்.
மதுரை டூ தாம்பரம் செல்லும் ரயில்
மதுரையில் இருந்து தாம்பரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலின் புறப்படும் நேரமும் மாற்றப்பட்டுள்ளது. புதிய டைம் டேபிள்படி, மதுரையில் இருந்து இரவு 8.35 மணிக்கு பதிலாக இரவு 8.40 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் செல்லும். தாம்பரத்திற்கு காலை 6.15 மணிக்கு வந்து சேரும்.
திருச்சியில் இருந்து திண்டுக்கல் செல்லும் ரயில் (76835) புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. இந்த ரயில் திருச்சியில் இருந்து மாலை 6.10க்கு புறப்பட்ட நிலையில், புதிய அட்டவணைப்படி இனி மாலை 6.35 மணிக்கு புறப்படும். தாமரைபாடி ரயில் நிலையத்திற்கு 8.10க்கு வந்தடையும். திண்டுக்கல் ஜங்ஷன் இரவு 9.05 மணிக்கு சென்றடையும். திருச்சியில் இருந்து 25 நிமிடங்கள் தாமதமாக இனி இந்த ரயில் புறப்படும்.
-
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட்












Click it and Unblock the Notifications