சமையல் கியாஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்.. டேங்கர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற ‘ஸ்ட்ரைக்’
சென்னை: புதிய வாடகை ஒப்பந்தத்தில் தங்களுக்கு பாதகமான அம்சங்கள் இருப்பதாக கூறி டேங்கர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்ய உள்ளனர். இதனால் தமிழ்நாடு புதுச்சேரி உள்பட 6 மாநிலங்களில் சிலிண்டர் வினியோகம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தென் மண்டல எல்பிஜி டேங்கர் உரிமையாளர்கள் சங்கம் நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த லாரி உரிமையாளர்கள் இதில் உறுப்பினர்களாக உள்ளனர். 6 ஆயிரம் டேங்கர் லாரிகளுக்கு மேல் இயக்கப்பட்டு வருகிறது. இந்த லாரிகள் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து சமையல் கியாஸ் எரிவாயுவை சப்ளை செய்து வருகின்றன.

ஆகஸ்டுடன் ஒப்பந்தம் முடிகிறது
இந்த லாரிகள் ஒப்பந்த அடிப்படையில் இயங்கி வருகின்றன. எண்ணெய் நிறுவனங்களுடன் இந்த லாரி உரிமையாளர்கள் செய்து கொண்டுள்ள ஒப்பந்தம் வருகிற ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைகிறது. இதனால், அடுத்த செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் 2025 ஆம் ஆண்டு முதல் 2030 ஆண்டுக்கான புதிய ஒப்பந்நம் நடைமுறைக்கு வர உள்ளது. இந்த ஒப்பந்தத்திற்கான விதிகளை மத்திய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்து உள்ளன.
ஆனால், இந்த விதிகள் பல்வேறு டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கு பாதகமாக இருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டது. அதாவது, இந்த ஒப்பந்தத்தில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகளை குறைவாக கேட்டு இருப்பதோடு, 21 டன் எடை கொண்ட கியாஸ் ஏற்றும் 3 அச்சு லாரிகளுக்கு முன்னுரிமை என்கிற விதியை அந்த நிறுவனங்கள் அறிவித்தன. இதனால், தங்களுக்கு பாதகமாக உள்ள நிபந்தனைகளை தளர்த்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து இருந்தனர்.
இன்று முதல் வேலைநிறுத்தம்
இதற்காக எண்ணெய் நிறுவன அதிகாரிகளுக்கு டேங்கர் லாரி உரிமையாளர்கள் கடந்த 24- ம் தேதி வரை கால அவகாசம் கொடுத்தனர். ஆனால் நேற்று வரை கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகளை ஏற்பது குறித்து பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவிக்கல்லை. இதனால், இன்று காலை 6 மணி முதல் தென்னிந்தியா முழுவதும் உள்ள பொதுத்துறை ஆயில் நிறுவனங்களின் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து, கியாஸ் லோடு ஏற்றாமல் டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளனர்.
இது குறித்து சங்கத்தலைவர் சுந்தரராஜன் நாமக்கல்லில் செய்தியாளர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். புதிய டெண்டர் ஒப்பந்தத்தில் உள்ள 3 அச்சு லாரிகளுக்கு முன்னுரிமை, கிளீனர் இல்லை என்றால் அபராதம், வாடகை நிர்ணயம் செய்வதில் புதிய முறை உள்ளிட்ட விதிகள் உள்ளன .இந்த விதிகள் டேங்கர் லாரி உரிமையாளர்களை பாதிக்கும் வகையில் உள்ள விதிமுறைகளை தளர்த்தக்கோரி எண்ணெய் நிறுவனங்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
எண்ணெய் நிறுவன அதிகாரிகளே பொறுப்பு
ஆனால், எங்கள் கோரிக்கையை எண்ணெய் நிறுவனங்கள் ஏற்கவில்லை. அதனால் இன்று காலை 6 மணி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்க உள்ளோம். இந்த வேலைநிறுத்த போராட்டத்திற்கு எண்ணெய் நிறுவன அதிகாரிகளே பொறுப்பு ஆவார்கள். எங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும். எனவே முதல்வர் மற்றும் சம்பந்தப்பட்ட துறையை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் இதில் தலையிட்டு எங்கள் கோரிக்கையை எண்ணெய் நிறுவனங்கள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுமார் 5 ஆயிரம் கியாஸ் டேங்கர் லாரிகள் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்க உள்ளன" என்றார். இன்று தொடங்கும் கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் நீடித்தால், தென்னிந்தியா முழுவதும் வீடுகளுக்கு சமையல் கியாஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகும் ஏற்பட்டுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications