எஸ்பி பாலசுப்பிரமணியம் உடல்நிலை சீராக உள்ளது.. எக்மோ சிகிச்சை தொடர்கிறது.. மருத்துவமனை அறிக்கை
சென்னை: திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
Recommended Video
கொரோனா நோய் தொற்று காரணமாக சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் எஸ் பி பாலசுப்ரமணியம் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இரு தினங்களுக்கு முன்பு மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

லேசான முன்னேற்றம்
இதையடுத்து திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பு மக்களும் எஸ் பி பாலசுப்ரமணியம் விரைவில் உடல் நலம் தேற வேண்டும் என்பதற்காக, கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று மருத்துமனை வெளியிட்ட செய்தி குறிப்பில், எஸ்பி பாலசுப்ரமணியம் உடல்நிலையில் லேசான முன்னேற்றம் இருப்பதாக கூறப்பட்டது.

சீராக உள்ளது
இந்த நிலையில் இன்று மாலை மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், எஸ்பி பாலசுப்ரமணியம் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், ஏற்கனவே வழங்கப்பட்டு வரக்கூடிய அனைத்து வகையான நவீன சிகிச்சை உபகரணங்களும் பயன்படுத்தப் பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதையும் அந்த செய்தி குறிப்பு விரிவாகத் தெரிவித்துள்ளது.

எக்மோ சிகிச்சை
இது பற்றிய செய்தி குறிப்பை பாருங்கள்: கொரோனா நோய்த்தொற்று காரணமாக எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார் எஸ் பி பாலசுப்பிரமணியம். வென்டிலேட்டர் மற்றும் எக்மோ உதவியுடன் ஐசியூவில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சர்வதேச நிபுணர்கள்
அவரது தற்போதைய மருத்துவ நிலைமை சீராக உள்ளது. தொடர்ந்து பல துறை நிபுணர்களைக் கொண்ட மருத்துவக்குழு அவரது உடல்நிலையை கண்காணித்து வருகிறது. மருந்தியல் நிபுணர்கள் உள்ளிட்டோர் அடங்கிய நிபுணர் குழு எஸ்பிபிக்கு சிகிச்சை அளித்து வருகிறது. தொற்றுநோய், நுரையீரல் உள்ளிட்டவற்றில் நிபுணத்துவம் பெற்ற சர்வதேச மருத்துவ நிபுணர்களுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் மருத்துவர்களும் இதில் அடங்குவர்.

உலகம் முழுக்க
உலகம் முழுக்கவே கொரோனா பாதிக்கப்பட்ட பலருக்கும் எக்மோ சிகிச்சை வழங்கப்பட்டு குணப்படுத்தப்பட்டுள்ளது. எனவே சர்வதேச மருத்துவர்கள் மற்றும் எங்களது மருத்துவ குழுவினர் இணைந்து தொடர்ந்து எஸ்பி பாலசுப்பிரமணியமுக்கு சிகிச்சை வழங்கி வருகிறார்கள். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications