டெல்லி மாஸ்டர்பிளான்.. அதிமுக பிரச்சனைக்கு பின் இப்படி ஒரு காரணமா.. சீக்ரெட்டை உடைத்த புள்ளி
சென்னை: அதிமுகவில் இப்போது நடக்கும் மோதல் பிளவிற்கான மோதல் கிடையாது. ஆனால் இது அதிகார மோதல். இது அதிமுகவில் உள்ள டாப் தலைவர்களை மீண்டும் ஒன்றாக கொண்டு வருவதற்காக டெல்லி செய்யும் வேலை. வெளியே போன தலைவர்களை மீண்டும் உள்ளே கொண்டுவருவதற்காக டெல்லி செய்யும் வேலை என்று மூத்த
பத்திரிகையாளர் எஸ்.பி லட்சுமணன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் நடக்கும் உட்கட்சி மோதல் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி லட்சுமணன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், செங்கோட்டையன் எடப்பாடியிடம் சவால்விட்டு பேச மாட்டார். அவர் விசுவாசமிக்க தொண்டர். அவர் தடாலடியாக பேச மாட்டார். அவர் எடப்பாடிக்கு எதிராக போர்க்கொடி எழுப்பவில்லை. அதனால்தான் அவரை யாரும் எதிர்க்கவில்லை. மோசமாக விமர்சனம் செய்யவில்லை. அவருக்கு என்று சில அதிருப்திகள் இருக்கலாம். மூத்த தலைவர்களை எடப்பாடி பழனிச்சாமி ஒதுக்கி வைக்க தொடங்கிவிட்டார்.

பேட்டி
தன்னை மட்டும் முன்னிலைப்படுத்தி எடப்பாடி கட்சி நடத்த நினைக்கிறார். அவருக்கு இதெல்லாம் உதவாது. கட்சிக்கும் இதெல்லாம் உதவாது. ஜெயலலிதாவே பணிந்து சென்ற காலங்கள் உள்ளன. ஆனால் அந்த பண்பு எடப்பாடியிடம் இல்லை. தேர்தல் ஆணையத்தில் வழக்கு வேறு வேகம் எடுத்துள்ளது. சொத்தை வழக்கு என்று நினைத்தார்கள். ஆனால் இந்த வழக்கு கைமீறி சென்றுள்ளது.அதிமுகவில் இப்போது நடக்கும் மோதல் பிளவிற்கான மோதல் கிடையாது. ஆனால் இது அதிகார மோதல். இது அதிமுகவில் உள்ள டாப் தலைவர்களை மீண்டும் ஒன்றாக கொண்டு வருவதற்காக டெல்லி செய்யும் வேலை. வெளியே போன தலைவர்களை மீண்டும் உள்ளே கொண்டுவருவதற்காக டெல்லி செய்யும் வேலை.
எடப்பாடி எடுக்கும் முடிவெல்லாம் ஸ்டாலினுக்குத்தான் சாதகமாக உள்ளது. திமுகவிற்குத்தான் சாதகமாக உள்ளது. திமுக அடுத்தடுத்து வெற்றிபெற எடப்பாடிதான் காரணம். எடப்பாடி எடுத்த தவறான முடிவுகள்தான் காரணம். இதெல்லாம்தான் அதிமுகவின் டாப் தலைவர்கள் கோபம் அடைய முக்கியமான காரணம், என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி லட்சுமணன் தெரிவித்துள்ளார்.
மோதல் பின்னணி
அத்திக்கடவு - அவினாசி திட்டத்திற்காக எடப்பாடி பழனிச்சாமிக்கு விவசாயிகள் எடுத்த பாராட்டு விழாவில் மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் கலந்து கொள்ளவில்லை. விழாவை அவர் புறக்கணித்தது சர்ச்சையாகியிருக்கிறது.
உள் கட்சி பூசல் தான் காரணம் என சொல்லப்பட்டது. அதற்கேற்ப, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் வைக்கப்படாததால் செல்லவில்லை என செங்கோட்டையன் சொல்கிறார். அத்திக்கடவு - அவிநாசி திட்டம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு நடந்த பாராட்டு விழாவில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் புகைப்படம் இல்லாததால் அந்த விழாவை புறக்கணித்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். நாங்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவால் அடையாளம் காணப்பட்டவர்கள். எங்களை வளர்த்து ஆளாக்கிய தலைவர்களின் படங்கள் விழாவில் இல்லை. அதனால் அந்த கூட்டத்திற்கு நான் செல்லவில்லை என்று கூறி உள்ளார்.
செங்கோட்டையன் அதிமுகவில் திடீரென கலகம் செய்ய தொடங்கி இருப்பது எடப்பாடி பழனிச்சாமி தரப்பிற்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான, நட்பான சில சீனியர்கள் முக்கியமான மெசேஜ் ஒன்றை கொடுத்துள்ளாராம்.
அதன்படி செங்கோட்டையனை ஓ. பன்னீர்செல்வத்தை போல எளிதாக எதிர்கொள்ள முடியாது.
இது ரொம்ப சவாலான விஷயம். கவனமாகவே எதிர்கொள்ள வேண்டும். இது போக செங்கோட்டையன் ஜெயலலிதா காலத்திலேயே அரசியல் செய்தவர். அவருக்கு கட்சி அரசியல், நிர்வாக பிரச்சனை, ஜாதி பார்முலாக்களை எதிர்கொள்ள தெரியும் என்று எச்சரித்து உள்ளார்களாம்.












Click it and Unblock the Notifications