Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்குகள்.. சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு மாற்றி ஹைகோர்ட் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்துள்ள வழக்குகளை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த வழக்கை, எம்.பி. மற்றும் எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வுக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முந்தைய அதிமுக ஆட்சியில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்ளிட்டோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதிமுக ஆட்சியில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் அப்போது வழக்கு தொடுக்கப்படவில்லை.

வேலுமணிக்கு எதிராக திமுகவின் அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ் பாரதி, அறப்போர் இயக்கம் சார்பாக புகார்கள் அளிக்கப்பட்டன. இந்த புகார்கள் மீது தற்போது இரண்டு வழக்குகள் பதியப்பட்டு உள்ளன.

இந்த புகார்களை அடிப்படையாக வைத்து எஸ். பி வேலுமணிக்கு சொந்தமான வீடு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பிதுறை சோதனை நடத்தப்பட்டது. 60 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையை தொடர்ந்து மொத்தம் எஸ். பி வேலுமணி உட்பட 17 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

ரெய்டு

ரெய்டு

எஸ்.பி வேலுமணி அவருக்கு நெருக்கமான அன்பரசன், கே. சந்திரபிரகாஷ், ஆர். சந்திரசேகர், ஆர் முருகேஷ் ஆகியோர் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த நிலையில் தன் மீதி பதியப்பட்டுள்ள வழக்குகளை தள்ளுபடி செய்யும்படி வேலுமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு கடந்த முறை தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசுத்தரப்பில் தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம் வாதம் செய்தார். அப்போது வழக்கை ரத்து செய்யக் கோரி வேலுமணி தாக்கல் செய்துள்ள மனு விசாரணைக்கு உகந்ததல்ல.

தமிழக அரசு

தமிழக அரசு

இந்த மனுவை ஒற்றை நீதிபதி தான் விசாரிக்க வேண்டும் என ஆட்சேபம் தெரிவித்தார். வேலுமணி சார்பில் மத்திய அரசு வழக்கறிஞர் ராஜு ஆஜராக கூடாது. வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியுள்ள நிலையில் வருமான வரித்துறைக்காக ஆஜராகும் மூத்த வழக்கறிஞர் ராஜு எப்படி வேலுமணிக்கு ஆதரவாக ஆஜராகலாம் எனக் கேள்வி எழுப்பினார். இதையடுத்து வேலுமணி தரப்பு வைத்த வாதத்தில், மத்திய அரசின் அனுமதி பெற்றே மத்திய அரசு வழக்கறிஞர் வேலுமணிக்காக ஆஜராகி வருவதாக அவரின் வழக்கறிஞர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இன்று விசாரணை

இன்று விசாரணை

இந்த வழக்கை ரத்து செய்வது தொடர்பான விசாரணையை இரண்டு நீதிபதிகளே மேற்கொள்ள வேண்டும் என்றும் வேலுமணி தரப்பு கோரிக்கை வைத்தது. இந்த கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, வேலுமணிக்காக மத்திய அரசு வழக்கறிஞர் ஆஜராகலாம் என்றும், இதை இரட்டை நீதிபதிகள் அமர்வு விசாரிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இந்த நிலையில் வேலுமணி தொடர்ந்த இந்த வழக்கு மீதான விசாரணை இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

கோரிக்கை

கோரிக்கை

நேற்று விசாரணைக்கு வர வேண்டிய இந்த வழக்கு, விசாரணை செய்யப்படவில்லை. இதையடுத்து பொறுப்புத் தலைமை நீதிபதி எம்.துரைசாமி, நீதிபதி சுந்தர் மோகன் அமர்வில் வழக்கை துரிதமாக விசாரிக்க வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. இதை ஏற்றுக்கொண்டு வழக்கை விசாரணைக்கு இன்றே எடுத்துக்கொள்வதாக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்த வழக்கு, பொறுப்புத் தலைமை நீதிபதி எம்.துரைசாமி, நீதிபதி சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

எஸ்.பி வேலுமணி தரப்பு

எஸ்.பி வேலுமணி தரப்பு

அப்போது அரசு தரப்பில் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி வழக்கை நடத்த தயாராக உள்ளதாக குறிப்பிட்டார். அப்போது, எஸ்.பி். வேலுமணி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஐயப்பராஜ், டெல்லியிருந்து மூத்த வழக்கறிஞர் இந்த வழக்கில் ஆஜராக இருப்பதால் வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

சிறப்பு அமர்வுக்கு மாற்றம்

சிறப்பு அமர்வுக்கு மாற்றம்

அறப்போர் இயக்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுரேஷ், தாங்கள் அளித்த புகாரின் அடிப்படையிலேயே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இதையடுத்து, இந்த வழக்கை எம்.பி., எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வுக்கு மாற்றுவதாக பொறுப்பு தலைமை நீதிபதி தெரிவித்தார். அப்போது வேலுமணி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜு, முதல் அமர்வு அல்லது இரண்டாவது அமர்வு விசாரிக்கலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்று குறிப்பிட்டார். இந்த வழக்கை தனி நீதிபதி முன் பட்டியலிட மறுத்த நீதிபதிகள், எம்.பி., எம்எல்ஏக்களுக்கான நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+