வேலுமணி டீமுக்கு எடப்பாடி செக்.. ஆதரவாளர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு
சென்னை: சட்டமன்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. கூட்டணி கட்சி உதவிகளுடன் தவெக ஆட்சியமைத்துள்ளது. அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதால் கட்சியில் பிளவு ஏற்பட்டது. சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வேலுமணி ஆதரவு எம்எல்ஏக்கள் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். எடப்பாடிக்கு எதிராக வேலுமணி அணி காய் நகர்த்தி வரும் நிலையில், தன்னுடைய ஆதவாளர்களுக்கு இபிஎஸ் முக்கிய உத்தரவு ஒன்றை வழங்கியுள்ளார்.
தமிழக அரசியல் களம் சட்டமன்ற தேர்தலில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தவெக பிற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளது. அதிமுகவில் தொடர்ந்து விரிசல் ஏற்பட்டு வருகிறது. எடப்பாடி பழனிசாமி, வேலுமணி அணிக்குள் தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகிறது.

அதிமுக பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நிர்வாகிகளிடம் கையெழுத்து வாங்கி வருகிறார். இதாற்காக பொதுக்குழு உறுப்பினர்களை சந்தித்து வேலுமணி ஆதரவு கோரி வருகிறார். தோல்விக்கான காரணத்தை ஆராய வேண்டும். தேர்தல் தோல்வி குறித்து விவாதித்து நல்ல முடிவு செய்ய வேண்டும் என்று வேலுமணி கூறியுள்ளார்.
மாவட்ட செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள். செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகளை சந்தித்து வேலுமணி அணியினர் ஆதரவு கோரி வருகிறார்கள். இந்நிலையில், வேலுமணி கையெழுத்து கேட்டால் யாரும் போட வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமி தன் ஆதரவாளர்களிடம் அறிவுறுத்தியுள்ளார்.
பொதுக்குழு கூட்டம் நடைபெற்றால் வேலுமணி ஆதரவாளர்கள் எடப்பாடிக்கு எதிராக பிரச்னை செய்து நெருக்கடி கொடுப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் பதவிக்கு தகுதியற்றவர் என்கிற விமர்சனத்தை வேலுமணி, சி.வி. சண்முகம், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் கூறி வருகிறார்கள்.
பொதுக்குழு நடைபெற்றால் தனது பதவியை பறிப்பதற்காக அவர்கள் காய் நகர்த்துவார்கள் என்று எடப்பாடி யோசிக்கிறாராம். அதனால் தான் அவர்களுக்கு எந்த இடத்திலும் வாய்ப்பு கொடுத்துவிடக் கூடாது என்று நினைக்கிறார். ஆதரவாளர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் அவர் அழுத்தமான குரலில், அவர்கள் கையெழுத்து கேட்டால் போடக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications