எஸ்பிபி குரலை பயன்படுத்திய தெலுங்கு படத் இசையமைப்பாளருக்கு மகன் எஸ்பிபி சரண் நோட்டீஸ்
சென்னை: செயற்கை நுண்ணறிவு மூலம் மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் குரலை உருவாக்கியதற்காக தெலுங்கு இசையமைப்பாளருக்கு அவருடைய மகன் சரண் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அசுர வளர்ச்சி பெற்றுள்ளது. இதனை பயன்படுத்தி நல்ல விஷயங்களை அதிகம் கொண்டு வரும் வேளையில் சில கெட்ட விஷயங்களுக்கும் பயன்படுத்துகிறார்கள்.

பெண்களை ஆபாசமாக சித்தரிப்பது உள்ளிட்ட விஷயங்களுக்கும் சில விஷமிகள் இந்த தொழில்நுட்பத்தை கையில் எடுத்து வருகிறார்கள். இதற்கு சிறந்த உதாரணம்- அண்மையில் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் புகைப்படத்தை வேறு ஒரு பெண்ணின் புகைப்படத்துடன் இணைந்து வைரலாக்கினர்.
அந்த புகைப்படத்தில் மார்பு பகுதி மிகவும் கவர்ச்சியாக தெரியும் படி இருந்தது. இதனால் சிலர் இது ராஷ்மிகா மந்தனாவின் புகைப்படம் என கருதி வைரலாக்கினர். இது குறித்து புகாரின் பேரில் இந்த புகைப்படம் Deep Fake video என தெரியவந்தது. இது தொடர்பாக மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதன் பின்னர் நடிகை கஜோல் உடைமாற்றும் வீடியோவும் வெளியானது. இதுவும் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டது. இந்த செயற்கை நுண்ணறிவை வைத்து செய்தி வாசிப்பாளர்கள் உருவாக்கப்பட்டனர். அது போல் பல நிறுவனங்களில் சிலரை வேலையை விட்டு வீட்டுக்கு அனுப்பிவிட்டு இந்த ஏஐயை பயன்படுத்தி வருவதாக சொல்லப்படுகிறது.
அந்த வகையில் மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் குரல் ஜெயிலர் படத்தில் பயன்படுத்தப்பட்டது. இந்த நிலையில் கீடா கோலா என்ற தெலுங்கு பத்தில் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் குரல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த விஷயத்தை இந்த படத்தின் இசையமைப்பாளர் விவேக் சாகர் அவருடைய பேட்டி ஒன்றில் ஒப்புக் கொண்டுள்ளார்.
ஆனால் அவருடைய குடும்ப உறுப்பினர்களிடம் முறையான அனுமதி பெறாமல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்ற விஷயம் தற்போது தெரியவந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த படத்தின் இசையமைப்பாளர்களுக்கு எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் மகன் எஸ்.பி.பி. சரண் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதில் எனது அப்பா மறைவுக்குப் பிறகு தொழில்நுட்பம் மூலம் அவரது குரல் பயன்படுத்தப்படுகிறது என்பது மகிழ்ச்சியான விஷயம்தான். ஆனால் இந்த விஷயம் எங்களுக்கு கெரியப்படுத்தப்படாமலும் அனுமதி பெறாமலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது எங்களுக்கு வேதனையை கொடுக்கிறது.
வணிக சுரண்டலுக்காக ஒரு லெஜென்டின் குரல் இப்படி பயன்படுத்தக் கூடாது. இதே நிலை தொடர்ந்து நீடித்தால் இசைத் துறைக்கு மதிப்புமிக்கவர்களாக இருக்கும் தற்போதைய மற்றும் வருங்கால பாடகர்களின் வாழ்வாதாரம் சூனியமாக போகும் என சரண் வருத்தம் தெரிவித்துள்ளார்.
முறையான அனுமதி பெறாமல் எனது தந்தையின் குரலை பயன்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும். நஷ்ட ஈடு மற்றும் ராயல்டியில் பங்கு வேண்டும் என அந்த நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications