Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‛தமிழிலேயே பேசுங்க’.. பாஜக நயினார் நாகேந்திரனை கலாய்த்த சபாநாயகர் அப்பாவு.. சட்டபையில் ஒரே சிரிப்பலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திக்கு எதிராக தமிழக சட்டசபையில் இன்று தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட நிலையில் தீர்மானத்தின் மீது எம்எல்ஏக்கள் பேசினார். அப்போது, பாஜகவின் நயினார் நாகேந்திரனை பார்த்து சபாநாயகர் அப்பாவு, ‛‛தமிழிலேயே பேசுங்கள்'' எனக்கூறியது சட்டசபையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

உள் துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான நாடாளுமன்ற அலுவல் மொழி குழு சமீபத்தில் பரிந்துரை ஒன்றை அளித்து இருந்தது. அதில் இந்தி மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி இந்தி பேசும் மாநிலங்களில் உள்ள ஐஐடி, ஐஐஎம் கல்வி நிறுவனங்களில் இந்தி மொழி பயிற்று மொழியாகக் கட்டாயமாக்க வேண்டும் என்றும் ஆங்கிலத்தை விருப்ப மொழியாக மட்டுமே வைத்து இருக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் வேலைவாய்ப்பு தேர்வுகளிலும் இந்தி மொழி அவசியமாக்கப்பட வேண்டும் என்றும் அதில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்தி எதிர்ப்புக்கு தீர்மானம்

இந்தி எதிர்ப்புக்கு தீர்மானம்

இதனால் மத்திய பாஜக அரசு இந்தி மொழியை மீண்டும் மீண்டும் திணிக்க உள்ளதாக இந்தி மொழி பேசாத மாநில தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள திமுக சார்பில் தமிழகம் முழுவதும் இந்தி திணிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக தமிழக சட்டசபையின் இரண்டாவது நாள் கூட்டம் இன்று தொடங்கியது. கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான குழுவின் இந்தி திணிப்புக்கு எதிரான தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீது எம்எல்ஏக்கள் பேசினார்.

புன்சிரிப்புடன் பேச்சு

புன்சிரிப்புடன் பேச்சு

ஒவ்வொருவரும் தங்களின் கருத்துகளை பதிவு செய்தனர். அப்போது பாஜகவின் நயினார் நாகேந்திரனை பேச சபாநாயகர் அப்பாவு அழைத்தார். இந்த வேளையில் அப்பாவுவும், நயினார் நாகேந்திரனும் ஒருவரையாருவர் பார்த்து புன்சிரிப்பை வெளிப்படுத்தினர். இதையடுத்து இருக்கையில் இருந்து எழுந்து பாஜகவின் நயினார் நாகேந்திரன் பேசினார்.

நயினாரை கலாய்த்த அப்பாவு

நயினாரை கலாய்த்த அப்பாவு

அப்போது நயினார் நாகேந்திரன், ‛மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே..' எனக்கூறிவிட்டு சில வினாடிகள் அப்படியே பேசாமல் நின்றார். இதை பார்த்த சபாநாயகர் அப்பாவு, நயினார் நாகேந்திரனை பார்த்து, ‛‛தமிழ், தமிமிலேயே பேசுங்கள்'' எனக்கூறினார். அதற்கு நயினார் நாகேந்திரன், ‛‛தமிழில் தான் பேச போறேன்'' என்றார். இதை கேட்ட உறுப்பினர்கள் சத்தமாக சிரித்தனர். சபாநாயகர் அப்பாவு, பாஜகவின் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டவர்களும் சிரித்தனர். இதனால் சட்டசபை சில வினாடிகள் சிரிப்பலையில் மூழ்கியது. இதையடுத்தும் விடாத சபாநாயகர் அப்பாவு, ‛‛வார்த்தை வரவில்லை அல்லவா'' எனக்கூறி காலை வாரினார்.

திருக்குறள் பேசும் பிரதமர் மோடி

திருக்குறள் பேசும் பிரதமர் மோடி

இதையடுத்து சிரித்த முகத்துடன் நயினார் நாகேந்திரன் பேச்சை துவங்கினார். அப்போது அவர், ‛‛தாய்க்கு பழிநேர்ந்தால் மகனுக்கும், அன்னை தமிழுக்கு பழி நேர்ந்தால் நாம் அனைவருக்குமானது. இதில் யாருக்கும் எந்தவிதமாக சந்தேகமும் இல்லை. நிச்சயமாக இந்தி திணிப்பு இருக்குமேயானால் தமிழகத்தில் பாஜக கட்சி அதனை வன்மையாக கண்டிக்கும். இதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. பிரதமர் மோடி ஐநா சபைக்கு சென்றாலும் சரி, அயோத்திக்கு சென்றாலும் சரி திருக்குறளையும், தமிழ் வளர்த்த புலவர்களையும் பேசுவார். பனாரஸ் பல்கலைக்கழகத்தில் தமிழுக்காக தனி இருக்கையை வாங்கி தந்தவர் பிரதமர் மோடி. இதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்காது.

எப்படி என்பது தெரியவில்லை

எப்படி என்பது தெரியவில்லை

அதேநேரத்தில் தமிழக முதல் அமைச்சர் கொண்டு வந்த இந்த தீர்மானத்தின் மீது பேசும்போது சி பிரிவு மாநிலங்களில் அதாவது இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மொழி திணிக்கப்படுவதாக கூறப்படுவது எப்படி என்பது தெரியவில்லை. ஆனால் 9.9.2022ம் ஆண்டில் கொடுக்கப்பட்ட பரிந்துரைப்படி சி பிரிவு மாநிலங்களில் தாய்மொழிக்கல்வி தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் இருக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பாஜகவினர் வெளிநடப்பு

பாஜகவினர் வெளிநடப்பு

பிரதமர் மோடி 2 நாட்களுக்கு முன்பு கூட அனைத்து மாநில சட்டங்கள், நீதிமன்ற தீர்ப்புகள் தாய்மொழியில் இருக்க வேண்டும் என பேசியுள்ளார். அந்த வகையில் தாய் மொழி தமிழுக்கு இழுக்கு வரும் என்பதை என்னால் எந்த விதத்திலும் நம்ப முடியவில்லை. இதனால் இந்தி எதிர்ப்பு தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம்'' என்றார். இதையடுத்து பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+