அக்.17ல் சட்டப்பேரவை கூடுகிறது.. துணை நிதிநிலை அறிக்கை தாக்கல்.. அப்பாவு அறிவிப்பு!
சென்னை: தமிழக சட்டப்பேரவை அக்.17ம் தேதி கூடும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை அக்.17ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அப்பாவு கூறுகையில், அன்றைய தினம் மறைந்த முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா உட்பட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு பேரவை ஒத்திவைக்கப்படும்.

துணை நிதிநிலை அறிக்கை
இதனைத்தொடர்ந்து அக்.17ம் தேதி அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில் பேரவை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்தலாம் என்பது குறித்து முடிவு செய்யப்படும். இதற்கு அடுத்த நாள் துணை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். அதன் மீதான விவாதங்கள் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.

அதிமுக விவகாரம்
தொடர்ந்து அதிமுக விவகாரம் குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, அதிமுக விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுகவின் கொறடா அளித்த கடிதம் தொடர்பாக உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும். ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி அளித்த கடிதங்கள் தொடர்பாக இரு தரப்பினரிடமும் விளக்கம் கேட்பது தொடர்பாக ஆய்வில் உள்ளது.

மரபுப்படி இருக்கைகள்
ஓபிஎஸ், இபிஎஸ் அணியினருக்கான இருக்கைகள் தொடர்பாக சட்டப்பேரவை கூடும்போது தெரியவரும். ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் முதலமைச்சர்களாக இருந்தவர்கள். நிச்சயம் கண்ணியமாக நடந்துகொள்வார்கள். அதேபோல் இருக்கைகள் ஒதுக்குவது தொடர்பாக சட்டமன்ற மரப்புபடியே நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

சட்டமன்றம் நேரலை
அதேபோல் சட்டப்பேரவையில் கேள்வி - பதில் நேரம் நேரலை செய்து வருகிறோம். தொடர்ந்து முழுமையாக வழங்க வேண்டும் என்பது திமுக அரசின் தேர்தல் வாக்குறுதி. விரைவில் சட்டமன்றத்தின் அனைத்து செயல்பாடுகளும் நேரலையாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications