ஆன்லைன் ரம்மி தடைமசோதா! ஆளுநர் படித்தாரா படித்தது போல் நடிக்கிறாரா? சட்டசபையில் கொந்தளித்த தலைவர்கள்
சென்னை: தமிழ்நாடு அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றிடக் கோரும் தீர்மானத்தின் மீது பேசிய அரசியல் கட்சித் தலைவர்கள் ஆளுநர் மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்தனர்.
ஏற்கனவே கொண்டுவரப்பட்ட ஆன்லைன் ரம்மி தடைசட்ட மசோதாவை என்ன காரணத்துக்காக ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார் என்பதே புரியவில்லை என ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அதேபோல் ஆளுநர் ரவி தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை படித்தாரா அல்லது படித்தது போல் நடிக்கிறாரா என ஜவாஹிருல்லா கேள்வி எழுப்பினார்.

வேல்முருகன்
*''ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் அதிகாரிகளை ஆளுநர் ரவி சந்தித்து பேசியது ஏன்''? -வேல்முருகன் கேள்வி
*''ஆர்.என்.ரவி தமிழ்நாட்டின் ஆளுநராக இருப்பது தமிழர்களுக்கு மிகப் பெரிய அவமானமாக உள்ளது'' -வேல்முருகன்
*''பல குடும்பங்களில் தாலி அறுபடுவதை தடுக்க கொண்டு வந்துள்ள ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை மனதார வரவேற்கிறேன்'' -வேல்முருகன்

ஈஸ்வரன்
*''ஏற்கனவே கொண்டுவரப்பட்ட ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை என்ன காரணத்துக்காக ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார் என்பதே புரியவில்லை'' -சட்டசபையில் ஈஸ்வரன் பேச்சு
*''தமிழ்நாட்டின் பண்பாட்டை சிதைக்கவும், சீர்குலைக்கவும் ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் மூலம் முயற்சி நடைபெறுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது'' -ஈஸ்வரன்
*'' தமிழ்நாடு அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை மீண்டும் ஆளுநர் திருப்பி அனுப்ப முடியாது'' -ஈஸ்வரன்

ஜவாஹிருல்லா
*''ஆளுநர் ரவி தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை படித்தாரா அல்லது படித்தது போல் நடிக்கிறாரா'' - சட்டசபையில் ஜவாஹிருல்லா ஆவேசம்
*மனிதன் மனிதனோடு விளையாடினால் திறன் வெளிப்படும், ஆன்லைன் ரம்மியை பொறுத்தவரை மனிதன் இயந்திரத்தோடு விளையாடக் கூடிய நிலை தான் உள்ளது.'' -ஜவாஹிருல்லா

நாகை மாலி(மார்க்சிஸ்ட் கம்யூ.)
*''ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடு கண்டனத்திற்குரியது, ஏற்கனவே நிறைவேற்றி அனுப்பப்பட்ட ஆன்லைன் தடைசட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியிருப்பது நியாயமற்றது'' -நாகை மாலி
*''மத்திய அரசின் அரசியல் கருவியாக ஆளுநர் பயன்படுத்தப்படுகிறார்'' -சட்டசபையில் நாகை மாலி பேச்சு

ஆளூர் ஷாநவாஸ்
*''ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா விவகாரத்தில் ஆளுநர் ரவி தனக்குட்பட்ட நெறிமுறைகளை மீறி செயல்படுவது வெட்ட வெளிச்சத்துக்கு வந்துள்ளது'' -ஆளூர் ஷாநவாஸ்
*''சட்ட சிக்கலை பற்றி ஆளுநருக்கு ஏன் கவலை? சட்டம் இயற்றிய அரசுக்கு சட்ட சிக்கலை எதிர்கொள்ளத் தெரியாதா? -ஆளுநர் ஷாநவாஸ்












Click it and Unblock the Notifications