ஓ மை காட்.. பாறைகளுக்குள் எக்கச்சக்கமாக சிக்கிக் கொண்ட பெண்.. மலங்க மலங்க விழித்த பக்தர்கள்.. வீடியோ
பாறைகளுக்கு நடுவில் சிக்கி கொண்ட பெண்ணின் வீடியோ ஷேர் ஆகி வருகிறது
சென்னை: பாறைகளுக்கு இடுக்கில் பெண்ணை கண்டதும், என்ன செய்வதென்று தெரியாமல் விழிக்கும் பொதுமக்களின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமீபகாலமாகவே, சோஷியல் மீடியாவில் நிறைய சம்பவங்கள் பதிவிடுவது வழக்கம்.. இதில், அதிர்ச்சிகரமான, அல்லது மகிழ்ச்சிகரமான, அல்லது ஆச்சரியமான வீடியோக்களும் நிறைய வெளியாகும்.
இதில் பக்தி வீடியோவும் அடக்கம்.. இப்போதும் ஒரு வீடியோ ஷேர் ஆகி வருகிறது.. இது எந்த ஊர் என்று தெரியவில்லை. ஆனால் தமிழ்நாடு போல் தெரியவில்லை..

விசேஷமான பாறை
அநேகமாக ஆந்திரா அல்லது கர்நாடக மாநிலத்தில் ஏதாவது ஒரு கிராமத்தில் எடுக்கப்பட்ட வீடியோ போல தெரிகிறது.. அது ஒரு கோயில்.. ஆண், பெண் குழந்தைகள் என ஏராளமான பக்தர்கள் அங்கு குவிந்துள்ளனர். அந்த இடத்தில் பிரார்த்தனை செய்வதற்காக பெரிய பாறை போல் வைத்துள்ளனர்.. அந்த பாறை இரண்டாக பிளவுபட்டு காணப்படுகிறது.. கருங்கல்லால் ஆன பாறையின் மேல் மஞ்சள், பூ, குங்குமம் போன்றவை கொட்டி வைத்துள்ளனர்.. இந்த பாறைக்கு நடுவில் சிறிய அளவு துளை உள்ளது..

ஒல்லி தேகம்
பக்தர்கள் தங்கள் பிராத்தனையை இந்த பாறையின் துளையில்தான் நிறைவேற்ற வேண்டும் போல் தெரிகிறது.. பாறையின் ஒருபக்கம் நுழைந்து, மறுபக்கம் வெளியே வர வேண்டும். இதுதான், இங்குள்ள நடைமுறை என தெரிகிறது. ஆனால், மிகவும் ஒல்லியான தேகம் உடையவர் என்றால், இந்த துளையில் சற்று சிரமத்துடன் நுழைந்து வெளியே வந்துவிடலாம்.. மற்றவர்களால் முடியாது.. அப்படியும் ஒரு பெண் இந்த பாறையின் நடுவே நுழைய முயற்சித்தார்.. ஆனால், உள்ளே நுழைந்துவிட்ட அவரால் வெளியே வர முடியவில்லை..

டிரெண்டு
நடுவில் சிக்கி கொண்டு அலறுகிறார்.. அங்கிருந்தோர் அந்த பெண்ணை வெளியே எப்படி எடுப்பது என்று தெரியாமல் விழிக்கிறார்கள். ஒருபக்கம் அந்த பெண்ணின் கையை பிடித்து வெளியே இழுக்கிறார்கள்.. மறுபக்கம் அந்த பெண்ணின் காலை பிடித்து வெளியே இழுக்கிறார்கள். ஆனால், நடுவில் வசமாக சிக்கி கொண்டுவிட்டார் அந்த பெண்.. பிறகு அவரை எப்படி வெளியே எடுத்தார்கள் என்று தெரியவில்லை.. இந்த வீடியோவைதான், நெட்டிசன்கள் ட்ரெண்டாக்கி வருகிறார்கள்..

சிடி ஸ்கேன்
இதற்கு சிடி ஸ்கேன் சாமி என்று ஒரு பெயரையும் வைத்து கிண்டல் செய்து வருகின்றனர்.. காரணம், இந்த பாறை அமைப்பையும், அதற்குள் பக்தர்கள் உள்ளே நுழைந்து வெளியே வருவதையும் பார்ப்பதற்கு அச்சு அசல், மருத்துவமனையில் உள்ள சி.டி ஸ்கேன் மெஷின் போலவே இருப்பதால் இந்த பெயரை வைத்துள்ளனர்.. அந்த பாறைகளுக்கு பக்கத்தில் வேறு சில பாறைகளும் உள்ளன.. பார்ப்பதற்கு அந்த இடமே பச்சை பசேல் என காணப்படுகிறது.. இவ்வளவு ரிஸ்க் எடுத்து பிரார்த்தனையை நிறைவேற்ற வேண்டுமா? என்றும் அக்கறையுடன் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications