"ஸ்லீப்பர் கோச்".. ஸ்டாலினின் சர்ப்ரைஸ்.. "4 சீட் ஒதுக்கீடு".. மகளிருக்கு வந்த ஹேப்பி நியூஸ்.. மாஸ்
சென்னை: பெண் பயணிகளின் வசதிக்காக, தமிழக போக்குவரத்து துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.. இந்த அறிவிப்பினை பெண்கள் வரவேற்று, மகிழ்ச்சி தெரிவித்து வருகிறார்கள்.
கோடை விடுமுறை தொடங்கிவிட்டதால், பேருந்துகள், ரயில்களில் கூட்டம் அலைமோத துவங்கிவிட்டன. இனி அடுத்தடுத்து வரும் நாட்களில் பயணிகளின் நெருக்கடி மேலும் அதிகரிக்கக்கூடும்.. அதனால், சிறப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டிய கட்டாயம், போக்குவரத்து துறைக்கு ஏற்பட்டுள்ளது.

புதிய திட்டம்: ஏற்கனவே, தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் மூலம் 1,200 பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆனால், திங்கள் முதல் வியாழக்கிழமை வரை அரசு பஸ்கள் காலியாக ஓடுகின்றன.. இதனால் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் மட்டும் பஸ்களில் கூட்டம் நிரம்புகிறது... இப்படிப்பட்ட சூழலில்தான், புதிய அறிவிப்பு ஒன்று வெளியானது.. அதாவது, நீண்ட தூரத்திற்கு இயக்கப்படும் அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களில் ஏற்படும் இழப்பை ஈடுசெய்யவும், ஆம்னி பஸ் பயணிகளை இழுக்கவும் இந்த பயண சலுகை திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, அரசு விரைவு பஸ்களில் ஒரு மாதத்திற்கு 5 முறை பயணம் செய்த பிறகு 6-வது முறை பயணத்தில் இருந்து ஒவ்வொரு பயணத்திற்கும் 50 சதவீத கட்டணம் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
7 வகையான சேவை: இந்நிலையில், அரசு விரைவு போக்குவரத்து கழகம் (SETC) சார்பாக இன்னொரு அறிவிப்பு வெளியாகி உள்ளது.. வெளிமாநிலங்களான, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு இந்த பஸ்கள் இயக்கப்படுகின்றன., இந்த SETC பஸ்களில் மொத்தம் 7 வகையான சேவைகள் உள்ளன.. அல்ட்ரா டீலக்ஸ், கிளாசிக், ஏசி அல்லாத ஸ்லீப்பர், ஏசி அல்லாத சீட்டர் மற்றும் ஸ்லீப்பர், ஏசி சீட்டர், ஏசி ஸ்லீப்பர், ஏசி சீட்டர் மற்றும் ஸ்லீப்பர் போன்ற சேவைகளில் இயங்கி கொண்டிருக்கிறது.
இந்த பஸ்ஸில் பயணிக்க வேண்டுமானால், 60 நாட்களுக்கு முன்பாக ரிசர்வ் செய்யும் முறை தற்போது அமலில் உள்ளது.. ஆனால், பெண் பயணிகள் தனியாக செல்வதில் தயக்கம் இன்னமும் உள்ளது.. காரணம், தனி இருக்கைகள் எதுவும் இந்த பஸ்ஸில் இல்லை.. எல்லாமே 2 இருக்கைகள் என்பதால், அதில் ஆண் பயணி யாராவது பக்கத்தில் பயணிக்க நேரிடும் என்பதால், பெண் பயணிகள் தயக்கம் காட்டுகிறார்கள்.
தமிழக அரசு அதிரடி: இந்த சங்கடத்தைதான், தமிழக அரசு நீக்கியிருக்கிறது.. கடந்த தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேசும்போது இதற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தார்..

தொலைதூர பேருந்துகளில் பெண்கள் தனியாக பயணிக்க தயக்கம் காட்டுகின்றனர். ஆனால் தனியாகவோ அல்லது குழுவாகவோ பெண்கள் அதிக அளவில் பயணிக்க வேண்டும் என்று மாநில அரசு விரும்புகிறது. இதற்காக SETC பேருந்துகளில் பெண்களுக்கு 4 இருக்கைகள் ஒதுக்கீடு செய்யப்படும். இது பஸ்ஸின் முன்புறம் அல்லது மத்திய வரிசையில் இடம்பெறும். பஸ் கிளம்புவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்புவரை www.tnstc.in என்ற இணையதளத்திற்கு சென்று முன்பதிவு செய்து கொள்ளலாம்.
ஒருவேளை கடைசி வரை பெண்களுக்கான அந்த 4 இருக்கைகளும் காலியாக இருந்தால் உடனே ஆண் பயணிகளுக்கு ஒதுக்கக் கூடாது. பஸ் ஸ்டாண்ட்கள் அல்லது பஸ் ஸ்டாப்புகளில் காத்திருக்கும் பெண்களுக்கு ஒதுக்கலாம்.. அதற்கும் வாய்ப்பில்லையென்றால், கடைசி வாய்ப்பாக ஆண் பயணிகளுக்கு ஒதுக்கலாம்" என்று தெரிவித்திருந்தார்.
ஸ்லீப்பர் பஸ்: இந்த அறிவிப்புதான் இப்போது நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி, அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் ஸ்லீப்பர் மற்றும் செமி-ஸ்லீப்பர் பேருந்துகளில் பெண்களுக்கு 4 இருக்கைகள் கடைசி நிமிடம் வரை காத்திருக்கும்... முன்பதிவு செய்தும் அல்லது நடத்துநரிடம் கேட்டு தெரிந்து கொண்டும் பயணிக்கலாம். இதுதொடர்பாக நடத்துநர்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு பெண் பயணிகளை ஈர்க்க செய்துள்ளது.. பெண்களிடம் பெரும் வரவேற்பும் கிடைத்துள்ளது.. அடிக்கடி பஸ் பயணம் செய்யும் பெண்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் நம்பப்படுகிறது.. இத்தகைய வசதிகள் விழுப்புரம், புதுச்சேரி, வேலூர், திருச்சி செல்லும் புறநகர் பேருந்துகளிலும் செய்து தரப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications