தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா.. அதுவும் பஸ்லயா.. அப்ப மொதல்ல இத படிங்க!
சென்னை: தீபாவளி பண்டிகைக்காக தமிழகத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் எந்தெந்த பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படுகிறது என்பதை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
வரும் செவ்வாய்க்கிழமை நாடு முழுவதும் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனால் பணி நிமித்தமாகவும் படிப்பிற்காகவும் சொந்த ஊரை விட்டு சென்னையில் தங்கியுள்ளவர்கள் தீபாவளிக்கு ஊருக்கு செல்வது வழக்கம்.

இதனால் வழக்கமாக இருக்கும் பேருந்துகளை வைத்து இந்த கூட்டத்தை சமாளிக்க முடியாது. எனவே ஆண்டுதோறும் பொங்கல், தீபாவளி பண்டிகைகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வழக்கமான பேருந்துகள்+ சிறப்பு பேருந்துகளை இயக்குவதால் பேருந்து வெளியே வருவதற்கே 2 மணி நேரம் ஆகிவிடுகிறது.
இதுமட்டுமல்லாமல் மற்ற வாகனங்களால் டிராபிக் ஜாம் ஆகிறது. இதை தடுக்க கடந்த சில ஆண்டுகளாக பண்டிகை காலத்தின் போது பேருந்துகளை பிரித்து பல்வேறு பேருந்து நிலையம் மூலம் இயக்கப்படுகிறது.
அந்த வகையில் எந்தெந்த ஊருக்கு எங்கிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்பதை பார்ப்போம்.
- மாதவரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஆந்திரா மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
- கே கே நகர் பேருந்து நிலையத்திலிருந்து ஈசிஆர் மார்க்கமாக புதுவை, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
- தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
- பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து காஞ்சிபுரம், செய்யார், வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர் மற்றும் ஓசூருக்கு செல்லும் பேருந்துகள் இயக்கம்.
- கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து மேற்குறிப்பிட்டுள்ள ஊர்களை தவிர பிற ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications