தீபாவளி: சொந்த ஊர் போலாமா? சென்னையிலிருந்து நவம்பர் 9 ஆம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி நவம்பர் 9ஆம் தேதி முதல் சென்னையிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தீபாவளி பண்டிகை வரும் 13 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அரக்கன் நரகாசுரனை அம்பாள் வதம் செய்த தினத்தை தீபாவளி பண்டிகையாக கொண்டாடி வருகிறோம்.

தீபாவளி, பொங்கல், தொடர் விடுமுறை , பள்ளி தேர்வு விடுமுறைகளுக்கு சென்னையிலிருந்து பலர் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இந்த மக்கள் எந்த சிரமமும் இல்லாமல் சொந்த ஊர் சென்று வர ஏதுவாக சிறப்பு பேருந்துகளை அரசு சில ஆண்டுகளாக இயக்கி வருகிறது.
அந்த வகையில் சென்னையிலிருந்து நவம்பர் 9, 10, 11 ஆகிய தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதாவது 4,675 சிறப்பு பேருந்துகளை அரசு இயக்குகிறது. அது போல் வழக்கமாக 6300 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவை இரண்டும் சேர்த்து மொத்தம் சென்னையிலிருந்து 10,975 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இதற்காக சென்னையில் மட்டும் ஆறு இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டன. அவை, கோயம்பேடு பேருந்து நிலையம், பூந்தமல்லி பேருந்து நிலையம், தாம்பரம் பேருந்து நிலையம், தாம்பரம் ரயில் நிலையம், கே.கே.நகர், மாதவரம் பேருந்து நிலையம் ஆகியவை ஆகும்.
ரெட்ஹில்ஸ், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திரா செல்லும் பேருந்துகள் மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு கடற்கரை சாலை (ECR) வழியாக புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் செல்லும் பேருந்துகள் கே.கே.நகர் பெருநகர பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம் மெப்ஸ் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி, கும்பகோணம் ஆகிய பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை, போளூர், பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புதுச்சேரி, கடலூர் செல்லும் பேருந்துகள் தாம்பரம் ரயில்வே பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், திருத்தணி, திருப்பதி செல்லும் பேருந்துகள் பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், மார்த்தாண்டம், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, அரியலூர், திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், பொள்ளாச்சி, ஈரோடு, ராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications