காலாண்டு தேர்வு விடுமுறை, திருப்பதி பிரம்மோற்சவம்.. டிஎன்எஸ்டிசி வெளியிட்ட மனம் குளிரும் அறிவிப்பு
சென்னை: காலாண்டு தேர்வு விடுமுறை, திருப்பதி பிரம்மோற்சவம், மகாளய அமாவாசையை முன்னிட்டு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதிக்கு செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 13-ம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. காலாண்டு தேர்வு விடுமுறையை முன்னிட்டு 1100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
இது தொடர்பாக அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் வெளியிட்டிருந்த அறிவிப்பில், "திருப்பதி திருமலையில் 'பிரம்மோற்சவம்' திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக சென்னை, திருச்சி, தஞ்சாவூர், சேலம், கோயம்புத்தூர், மதுரை, காரைக்குடி, கும்பகோணம், தூத்துக்குடி மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களிலிருந்து திருப்பதிக்கு செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 13-ம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது.

இப்பேருந்துகளுக்கு முன்பதிவு வசதியும் செய்யப்பட்டுள்ளது. இதேபோல், அக்.2-ம் தேதி மகாளய அமாவாசையை முன்னிட்டு சென்னை, சேலம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்து அக்.1-ம் தேதி ராமேசுவரத்துக்கும், ராமேசுவரத்திலிருந்து அக்.2-ம் தேதி சென்னை, சேலம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களுக்கும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இப்பேருந்துகளுக்கும் www.tnstc.in என்ற இணையதளம் மற்றும் tnstc செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தைக் கண்காணிக்க குறிப்பிட்ட பேருந்து நிலையங்களில் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்" இவ்வவாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே காலாண்டு விடுமுறையையொட்டி, ஊர்களுக்குச் செல்வதற்கு ஏதுவாக 1,100 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "செப்டம்பர் 27ம் தேதி (வெள்ளிக்கிழமை) பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை தொடக்கம், செப்.28, 29 வார இறுதி நாட்கள் என்பதால் என்பதால் சென்னையிலிருந்தும், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் ஏராளமானோர் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம்.
எனவே இதனைக் கருத்தில் கொண்டு செப்டம்பர் 27, 28 தேதிகளில் சென்னை, கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 740 பேருந்துகள், கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூர் ஆகிய இடங்களுக்கு 140 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 20 பேருந்துகளும் இயக்கப்பப்பட உள்ளது.
மேலும், பெங்களூர், திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பிற பகுதிகளுக்கு 200 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 1,100 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சிறப்பு பேருந்து இயக்கத்தைக் கண்காணிக்க குறிப்பிட்ட பேருந்து நிலையங்களில் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வார இறுதி நாட்களில் பயணிக்க சுமார் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்திருக்கிறார்க்ள். அதே நேரம், ஞாயிறன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை, பெங்களூர் உள்ளிட்ட இடங்களுக்கு திரும்புவதற்கு அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications