பெரிய சதி? கோவை, பொள்ளாச்சி, ஈரோட்டை உலுக்கிய பெட்ரோல் குண்டு வீச்சு.. களமிறங்கிய "ஸ்பெஷல் போர்ஸ்"!
சென்னை: பாஜக அலுவலகம், பாஜகவினருக்கு சொந்தமான இடங்கள் பலவற்றில் இன்று பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் கோவை, சேலம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
திமுக எம்பி ஆ. ராசா பேச்சை விமர்சனம் செய்து பாஜகவினர் ஆங்காங்கே போராட்டம் செய்து வருகின்றனர். இந்த போராட்டம் சில இடங்களில் மோதலாகவும், சட்ட ஒழுங்கு பிரச்சனையாகவும் மாறி உள்ளது.
சில இடங்களில் போலீசாரை பாஜகவினர் தாக்கிய சம்பவங்கள் கூட நடைபெற்றன. இந்த நிலையில்தான் பாஜக போராட்டங்களுக்கு இடையில் நேற்று பாஜக அலுவலகத்தில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசினார்கள்.

கோயம்புத்தூர்
கோவை சித்தாபுதூர் பகுதியில் வியாழக்கிழமை இரவு மாநகர பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் நிரப்பிய பாட்டில் வீசப்பட்டது. இந்த பெட்ரோல் குண்டை வீசியது யார் என்று விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இந்த குண்டை வீசியவர்கள் தொடர்பாக சிசிடிவி கேமரா காட்சிகளும் வெளியாகி உள்ளன. மது பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி அதை வீசி உள்ளனர். இந்த பெட்ரோல் குண்டு வெடிக்கவில்லை. இதனால் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பெட்ரோல் குண்டு
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில்தான் வேறு சில இடங்களிலும் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டு உள்ளன. அதன்படி கோவையில் மாருதி என்ற துணிக்கடையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு உள்ளது. இந்த கடையின் நிர்வாகி பாஜக கட்சிக்காரர் என்று கூறப்படுகிறது. ஒப்பணக்கார வீதியில் இந்த கடை உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாகவும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இது போக இன்று காலை 100 அடி சாலையில் உள்ள வெல்டிங் கடை மீதும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

டீசல் குண்டு
இந்த கடை ரத்தினபுரி பாஜக மண்டலத் தலைவர் மோகனுக்கு சொந்தமான கடை என்று கூறப்படுகிறது. இது போக இந்து முன்னணியை சேர்ந்த சரவணகுமார் என்பவரின் ஆட்டோ சேதம் செய்யப்பட்டு உள்ளது. மேட்டுப்பாளையத்தில் பிளைவுட் கடை ஒன்றின் மீதும் இன்று பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. அங்கு இருந்த கார் ஒன்றும் சேதம் செய்யப்பட்டு உள்ளது. ஈரோட்டிலும் பாஜக நிர்வாகிக்கு சொந்தமான கடை ஒன்றில் டீசல் குண்டு வீசப்பட்டுள்ளது.இது போக பொள்ளாச்சி அடுத்த குமரன் நகர் பகுதியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக புகார் வைக்கப்பட்டு உள்ளது.

தாக்குதல்
பாஜக மாவட்ட செயலாளர் பொன்ராஜ், வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த குண்டுகள் எதுவும் பெரும்பாலும் வெடிக்கவில்லை. இதன் காரணமாக உயிர் சேதங்கள், பொருட் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் இப்படி அடுத்தடுத்து பெட்ரோல் குண்டுகள் வீசப்படுவது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது ஏதாவது திட்டமிட்ட சதியா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல் ஏதாவது கலவரத்தை உருவாக்கும் எண்ணத்தோடு இந்த சம்பவங்கள் நடக்கின்றவா என்றும் போலீசார் விசாரணை செய்து வருகின்றன.

சிறப்பு காவல்படை
இதையடுத்து தற்போது அங்கு தமிழ்நாடு சிறப்புக் காவல்படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். கோவை , ஈரோடு முழுக்க மொத்தம் 6 தமிழ்நாடு சிறப்புக் காவல்படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். மொத்தம் 600 வீரர்கள் ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். கலவரம் எதுவும் ஏற்படாத வகையில் தமிழ்நாடு சிறப்புக் காவல்படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். கோவை, ஈரோட்டில் இதனால் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. சேலத்திலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
-
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு











Click it and Unblock the Notifications