பட்டாசே! நாளை அதிகாலை முதல் மெட்ரோ ரயிலில் ஃப்ரீயா போகலாம்! மாரத்தான் பங்கேற்பாளர்களுக்கு சர்ப்ரைஸ்!
சென்னை: சென்னையில் மாரத்தான் பங்கேற்பாளர்கள் வசதிக்காக நாளை அதிகாலை 3.40 மணி முதல் சிறப்பு மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளது. மாரத்தானில் பங்கேற்போர், QR குறியீடு போடப்பட்ட அட்டையை பயன்படுத்தி கட்டணம் இன்றி இலவசமாக பயணிக்கலாம் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
4வது சர்வதேச கருணாநிதி நினைவு மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமையான நாளை (ஆகஸ்ட் 6) அதிகாலை 4 மணி முதல் காலை 11 மணி வரை நடைபெறுகிறது. இந்த போட்டி 5 கி.மீ, 10 கி.மீ, 21.1 கி.மீ, மற்றும் 42.2 கி.மீ என 4 பிரிவுகளில் நடைபெற உள்ளது. அனைத்துப் பிரிவு மாரத்தான் போட்டிகளும் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் தொடங்கி, தீவுத்திடல் மைதானத்தில் முடிவடைகிறது.

கருணாநிதி நினைவு சர்வதேச மாரத்தான் நாளை நடைபெறுவதையொட்டி, மாரத்தான் பங்கேற்பாளர்களின் வசதிக்காகவும், அவர்களுக்கு இடையூறு அற்ற எளிமையான பயண அனுபவத்தை வழங்கும் வகையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் கலைஞர் நினைவு சர்வதேச மாரத்தான் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
அதன்படி, மாரத்தான் பங்கேற்பாளர்கள், மெட்ரோ ரயில் நிறுவனத்தின் QR குறியீடு போடப்பட்ட அட்டையை பயன்படுத்தி, நாளை அதிகாலை 3.40 மணி முதல் மதியம் 12.00 மணி வரை இருமுறை மட்டும் Round Trip, மெட்ரோ இரயிலில் எவ்வித கட்டணமும் இன்றி பயணம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான சிறப்பு மெட்ரோ ரயில் சேவைகள் மாரத்தானில் பங்கேற்பவர்களுக்கு மட்டும் பின்வரும் அட்டவணையின் படி இயக்கப்படுகிறது என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, சைதாப்பேட்டையில் இருந்து அதிகாலை 3.40 மணிக்கு சென்னை அரசினர் தோட்டத்திற்கு முதல் மெட்ரோ ரயில் புறப்படும்.
சின்னமலை ஸ்டேஷனில், 3.50 மணிக்கும், கிண்டியில் இருந்து 3.55 மணிக்கும், விமான நிலையத்தில் இருந்து 4 மணிக்கும், விம்கோ நகர் ரயில் நிலையத்தில் இருந்து 4 மணிக்கும், விமான நிலையத்தில் இருந்து 4.10 மணிக்கும் மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது.

வழக்கமான மெட்ரோ ரயில் சேவைகள் காலை 5 மணி முதல் இயக்கப்படும். மாரத்தான் பங்கேற்பாளர்கள் வசதிக்காக அதிகாலை 3.40 மணி முதல் நாளை இயக்கப்படுகிறது. எனவே மாரத்தான் பங்கேற்பாளர்கள் இந்த வசதியை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்க்கொள்ளப்பட்டுள்ளனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications