ஆட்டின் விலை ரூ.1.60 லட்சமா? செம்மறி ஆட்டையே வியந்து பார்த்த மக்கள்.. உல்லாஸுக்கு ஹேப்பி.. ஸ்பெஷல்
சென்னை: 1 ஜோடி ஆடுகள் சோஷியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கின்றன.. கர்நாடக மாநிலத்திலுள்ள ஒரு கிராமத்தில் இந்த ஆடுகளை, அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்து வருகிறார்கள்.. ஆட்டின் முன்னாள் உரிமையாளர் உல்லாஸ் மட்டற்ற மகிழ்ச்சியில் காணப்பட்டு வருகிறாராம்.. இதற்கு என்ன காரணம் தெரியும்? யாரந்த உல்லாஸ்?
பக்ரீத் போன்ற பண்டிகைகளின்போது, இஸ்லாமியர்கள் செம்மறி ஆடுகளை இறைச்சிக்காக அதிகம் வாங்குவது வழக்கமாகும்.. பண்டிகை நேரத்தில் செம்மறி ஆடுகளின் தேவை அதிகரிக்கிறது.

காரணம், குர்பானி எனப்படும் தானம் கொடுக்க, முஸ்லிம் மக்கள், செம்மறி ஆடுகளை கொள்முதல் செய்வார்கள்.. அதற்கேற்ப, வியாபாரிகளும், கறிக்கடை உரிமையாளர்களும், வெள்ளாடுகளை நிறுத்திவிட்டு, செம்மறி ஆடுகளையே கொள்முதல் செய்வர். இதனால் செம்மறி ஆட்டின் விலை, பக்ரீத் நேரத்தில் உயர்ந்து காணப்படும்.
அதேபோல, வயல்களில் செம்மறி ஆடுகளை மேயவிட்டு, இயற்கை உரம் தயாரிப்பதற்கும் விவசாயிகள் பயன்படுத்துவார்கள்.
ராமநாதபுரம், விருதாச்சலம் உள்ளிட்ட பகுதிகளில், செம்மறி ஆடுகள் வளர்ப்பு அதிகமாகும்.. அறுவடை முடிந்த விவசாய நிலத்தில் விவசாய கழிவுகளை அகற்றாமல், தீயிட்டு கொளுத்தாமல் இயற்கை உரத்திற்காக அவற்றில் செம்மறி ஆடு மந்தைகளை அடைய போடுவார்கள்..
பயிர் கழிவுகள்
காரணம், வயற்காட்டில் அறுவடையின்போது பயிர் கழிவுகள் எஞ்சி தேங்கி காணப்படும்.. இவைகளின் மீது செம்மறி ஆடுகளை அடையப்போடுவதால் ஆட்டு கழிவுகள் சேர்ந்து இயற்கை உரமாக மாறிவிடும்..
பயிர்கழிவுகள், ஆட்டு கழிவு சேர்ந்த கலவையுடன் கோடை காலத்தில் உழவு செய்யும்போது மண் கிளரப்பட்டு இயற்கை உரமாக அமையும்.. பருவமழை காலத்தில் செய்யப்படும் உழவார பணிகளின்போது கிடைக்கும் இயற்கை உரம் பயிர்களுக்கு சிறந்த நுண் உரமாக அமைவதுடன், வேர்ப்பகுதிகளும் வலுவடைந்து, பயிர்கள் செழிப்பாக வளர தூண்டுகோலாக அமையும்.
செம்மறி ஆட்டுக்கு கிராக்கி
எனவேதான், தமிழகம் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதிலுமே செம்மறி ஆடுகளுக்கு கிராக்கி இருந்து கொண்டேயிருக்கிறது.
இப்போது கர்நாடக மாநிலம், மண்டியா பண்டூர் இன செம்மறியாடுகளுக்கு கடும் கிராக்கி நிலவி வருகிறது.. நேற்றையதினம், மண்டியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர், தன்னுடைய செம்மறி ஆட்டை வைத்து, மொத்த பேரையும் திகைக்க செய்துள்ளார்..
உல்லாஸ் கவுடா குஷி
மண்டியா மாவட்டம் மலவள்ளி தாலுகா கிருகவாலு கிராமத்தை சேர்ந்தவர் உல்லாஸ் கவுடா.. இவருக்கு 24 வயதாகிறது.. பண்டூர் இன செம்மறி ஆடுகளை சொந்தமாக வைத்து வளர்த்து வந்தார்...காரணம், பண்டூர் செம்மறி ஆடுகள் இனம் அழிந்துவிடக்கூடாது என்ற ஒரே நோக்கத்திற்காகவே உல்லாஸ் கவுடா இந்த இன ஆடுகளை வளர்த்து வருகிறார்.
இப்படிப்பட்ட சூழலில், தான் வளர்த்து வந்த ஒரு ஜோடி பண்டூர் இன செம்மறி ஆட்டு கிடாவை, வத்தரஹள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயிகளான குமார் மற்றும் குல்லேகவுடா ஆகியோருக்கு விற்றுள்ளார்..
ஒரு ஜோடி ஆடு
எவ்வளவு ரூபாய்க்கு தெரியுமா? 1 ஒரு ஜோடி ஆடுகள், ரூ.1 லட்சத்து 60 ஆயிரத்துக்கு விற்றிருக்கிறார்.. அதுமட்டுமல்ல, விலைக்கு வாங்கப்பட்ட அந்த ஆட்டு கிடாக்கள் கிருகவாலு கிராமம் முழுவதுமே ஊர்வலமாக கொண்டு வரப்பட்டன.
இந்த வகை ஆடுகள் ஏன் ஸ்பெஷல் தெரியுமா? கர்நாடகாவில் காணப்படும் ஒரு வகையான செம்மறி ஆடு இனம்தான் இந்த பந்தூர் ஆடுகள்.. இது கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தில் அதிகம் காணப்படுகிறது. இறைச்சிக்காகவே இது வளர்க்கப்படுகிறது,
அப்படியென்ன ஸ்பெஷல்
இந்த ஆடுகளின் கண்கள் சிறியதாக இருக்கும்.. கரடுமுரடான முடிகள் இருக்கும்.. கர்நாடகாவின் உள்நாட்டு இனங்களில் ஒன்றாக உள்ளதால், அம்மாநில அரசு அவற்றின் பாதுகாப்பிற்காக பலவேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது..
அதனால்தான், இத்தனை ஸ்பெஷல் நிறைந்த பந்தூர் ஆடுகளுக்கு தொடர்ந்து கிராக்கி உள்ளது.. தற்போது 1.60 ஆயிரம் ரூபாய்க்கு விலைபோன ஒரு ஜோடி செம்மறி ஆடுகள்தான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கின்றன.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications