தமிழ்நாட்டின் கோயில்களில் இன்னைக்கு ஸ்பெஷல் பூஜைகள்.. பக்தர்கள் குஷியோ குஷி: ஜொலி ஜொலிக்கும் அயோத்தி
சென்னை: அயோத்தியில் இன்று ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு, தமிழக கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்த தடை விதிக்கப்படவில்லை என தமிழக அரசு விளக்கம் அளித்திருந்த நிலையில், கோயில்களில் சிறப்பு பூஜைகள் இன்று நடத்தப்பட உள்ளன. இதற்கான ஏற்பாடுகளும் ஜரூராக நடைபெற்று வருகின்றன.
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடக்கிறது.. அயோத்தி ராம ஜென்ம பூமியில், ராமர் கோவில் 1800 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டிருக்கிறது.. 3 அடுக்குகளாக கட்டப்பட்டுள்ள இந்த கோவிலில், இன்று குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

குழந்தை ராமர்: குழந்தை ராமரை பிரதிஷ்டை செய்யும் முக்கிய பூஜை இன்று பிற்பகல் 12.20 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1 மணி வரை நடக்க உள்ளது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று, முறைப்படி கோயிலை திறந்து வைக்கிறார்.
அந்தவகையில், இன்றைய தினம், கும்பாபிஷேக தினத்தன்று பொதுமக்கள் வீடுகளில் தீபம் ஏற்றி வழிபாடு நடத்த வேண்டும் என்று ஏற்கனவே பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். இதே வேண்டுகோளை, தமிழக ஆளுநர் ரவியும் நேற்றைய தினம் முன்வைத்திருந்தார்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் நடத்த மாநில அரசு தடை விதித்ததாக நேற்றைய தினம் செய்தி வெளியானது.
கண்டனம்: உடனே மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளிதழ் செய்தியை குறிப்பிட்டு, "தமிழ்நாடு அரசின் இந்து விரோத, வெறுக்கத்தக்க செயலை வன்மையாக கண்டிக்கிறேன்" என காட்டமாக கூறியிருந்தார்.
இதற்கு தமிழக அரசு உடனடியாக பதிலளித்ததுடன், ராமர் கோயில் தொடர்பாக தமிழ்நாடு கோயில்களில் அரசு எந்தவித தடையும் விதிக்கவில்லை என்றும், தமிழ்நாடு அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் அப்பட்டமான வேண்டுமென்றெ உள்நோக்கத்துடன் பொய்ச்செய்தியை வெளியிட்டு, உண்மைக்கு புறம்பான செய்தியை வெளியிட்ட சம்பந்தப்பட்ட நாளிதழ் மீது அரசு சார்பில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியிருந்தது.
சிறப்பு பூஜைகள்: இதையடுத்து, இன்றைய தினம், தமிழகத்தின் கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன.. மேலும், திருமண மண்டபங்கள், பொது இடங்களில் சிறப்பு வழிபாடு, பஜனை, அன்னதானம் போன்றவையும் நடத்தப்படுகின்றன.. இது பக்தர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications