PHH மற்றும் AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! ‘இந்த’ தேதியை மட்டும் மறக்காதீங்க மக்களே
சென்னை: தமிழகத்தில் ரேஷன் கார்டு வைத்திருக்கும் பொதுமக்கள் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்டவற்றுக்காக மனு அளிக்க சென்னையின் 19 மண்டலங்களிலும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் செயல்பட்டு வரும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் சிறப்பு குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. வரும் 13-ஆம் தேதி சனிக்கிழமை நடக்கும் இந்த முகாமினை பொதுமக்கள் ரேஷன் கார்டு தொடர்பான சேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
அந்த வகையில், சென்னையிலுள்ள 19 மண்டலங்களில் வருகின்ற 13.09.2025 அன்று பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடக்க உள்ளது.
பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடும்ப அட்டைதாரர்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும், சென்னையைப் பொறுத்தவரை மண்டல அலுவலகங்களிலும் மக்கள் குறைதீர் முகாம் பிரதி மாதமும் இரண்டாம் சனிக்கிழமை நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.

உணவு வழங்கல் திட்டம்
அதன்படி செப்டம்பர் 2025 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் 13.09.2025 அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது. குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் மற்றும் அங்கீகாரச் சான்று உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படும்.
சிறப்பு முகாம்
மேலும், பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சென்னையிலுள்ள 19 மண்டல அலுவலகப் பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இச்சேவையினை பயன்படுத்திக் கொள்ளலாம்.
குடும்ப அட்டை சரிபார்ப்பு
இதேபோல், மதுரை, திண்டுக்கல், தேனி, காஞ்சிபுரம், திருச்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் பொது விநியோகத்திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்குவதன் பொருட்டு அனைத்து வட்டாட்சியர் அலுவலக வளாகங்களில் செயல்பட்டு வரும் தனி வட்டாட்சியர்(கு.பொ.)/வட்ட வழங்கல் அலுவலகங்களில் 13.09.2025 (சனிக்கிழமை) அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை பொது விநியோகத்திட்டம் தொடர்பாக சிறப்பு குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது.
ரேஷன் கார்டு புதுப்பிப்பு
இந்த முகாம்களில், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை / நகல் அட்டை கோரிக்கை, கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் தொடர்பாக மனு அளிக்கலாம். மேலும், பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார் மனு அளிக்கலாம். தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்து புகார் மனு அளிக்கலாம்.
கைவிரல் ரேகை பதிவு
எனவே, பொதுமக்கள் அனைவரும் இந்த முகாம்களில் கலந்து கொண்டு மேற்காணும் கோரிக்கை தொடர்பான மனுக்களை அளித்து தீர்வு கண்டு பயன்பெறலாம். மேலும், PHH மற்றும் AAY குடும்ப அட்டையிலுள்ள குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் நியாய விலைக்கடைகளுக்குச் சென்று நியாய விலைக்கடை பணியாளர்களிடம் கைரேகை பதிவு இயந்திரத்தில் தங்கள் கைரேகையைப் பதிவு செய்து கொள்ளலாம்.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
ரேசன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! வீடு தேடி வரும் ரேசன் பொருள்! இந்த மாதம் எப்போது வரும்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications