சூரிய கிரகணம்.. தமிழகம் முழுவதும் மசூதிகளில் சிறப்பு தொழுகை! திரளாக பங்கேற்ற இஸ்லாமியர்கள்
சென்னை: சென்னை உட்பட இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் இன்று சூரிய கிரகணம் தென்பட்ட நிலையில், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மசூதிகளில் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது.
இந்தியா உட்பட உலகின் பெரும்பாலான நாடுகளில் இன்று மாலை பகுதி சூரிய கிரகணம் தென்பட்டது.
இந்தியாவில் மாலை 4:29 மணிக்கு தென்படத் தொடங்கிய இந்த சூரிய கிரகணம், சூரிய அஸ்தமன நேரமான 5:42 மணியளவில் மறைந்தது.

நேரம்
மாலை 5:30 மணியளவில் முழு சூரிய கிரகணத்தையும் மக்கள் பார்த்தனர். மொத்தமாக இந்தியாவில் 1 மணி நேரம் 45 நிமிடங்கள் இந்த கிரகணம் தென்பட்டது. அசாம், அருணாச்சல பிரதேசம், மணிப்பூர் போன்ற வடகிழக்கு மாநிலங்களில் மட்டும் சூரிய கிரகணம் தெரியவில்லை

தென் இந்தியா
தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா ஆகிய தென் மாநிலங்களின் முக்கிய நகரங்களில் சூரிய கிரகணம் ஒரு மணி நேரத்துக்கும் குறைவாக தெரிந்து இருக்கிறது. சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்கள், கோவை, ஊட்டி உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் சூரிய கிரகணம் தெளிவாக தென்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்து உள்ளனர்.

கண்டுகளித்த மக்கள்
தமிழ்நாட்டில் சூரிய கிரகணம் தென்பட்டதற்காக புகைப்படங்களையும் பொதுமக்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். தொலைநோக்கிகள் உதவியுடன் இதனை பொதுமக்கள் கண்டுகளிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. நாடு முழுவதும் சூரிய கிரகணத்தை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடுகளும் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.

மசூதிகள் சிறப்பு தொழுகை
இதேபோல் தமிழ்நாட்டின் பெரும்பாலான மசூதிகளிலும் சூரிய கிரகண சிறப்பு தொழுகை நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் உள்ள மஸ்ஜிதுல் அக்சா பள்ளியில் நடைபெற்ற கிரகண தொழுகையில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர். அதேபோல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் சிறப்பு கிரகண தொழுகை நடத்தப்பட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications