தமிழ் புத்தாண்டு.. திருநெல்வேலி, தூத்துக்குடி செல்வோருக்கு நல்ல செய்தி.. தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னை: தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அதன்படி, நெல்லையில் இருந்து நாளை (வியாழக்கிழமை) இரவு 11.40 மணிக்கு எழும்பூருக்கு சிறப்பு ரயில் (வண்டி எண்-06070) இயக்கப்படுகிறது. அதே போல, எழும்பூரில் இருந்து வருகிற 10-ந்தேதி மதியம் 12.30 மணிக்கு நெல்லைக்கு சிறப்பு ரயில் (06069) இயக்கப்படுகிறது.
சென்னை சென்ட்ரலில் இருந்து கொல்லத்திற்கு வருகிற 15-ந்தேதி மதியம் 3.10 மணிக்கு சிறப்பு ரயில் (06119) இயக்கப்படுகிறது. அதேபோல, கொல்லத்தில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு வருகிற 16-ந்தேதி காலை 10.40 மணிக்கு சிறப்பு ரயில் (06120) இயக்கப்படுகிறது.

எழும்பூரில் இருந்து வடக்கு திருவனந்தபுரத்திற்கு வருகிற 10-ந்தேதி இரவு 11.55 மணிக்கு சிறப்பு ரயில் (06115) இயக்கப்படுகிறது. அதேபோல, வடக்கு திருவனந்தபுரத்தில் இருந்து எழும்பூருக்கு வருகிற 15-ந்தேதி மாலை 3.45 மணிக்கு சிறப்பு ரயில் (06116) இயக்கப்படுகிறது.
சென்னை சென்ட்ரலில் இருந்து தூத்துக்குடிக்கு வருகிற 13-ந்தேதி இரவு 11.50 மணிக்கு அதிவிரைவு சிறப்பு ரயில் (06151) இயக்கப்படுகிறது. அதேபோல, தூத்துக்குடியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு வருகிற 14-ந்தேதி மதியம் 3.30 மணிக்கு அதிவிரைவு சிறப்பு ரயில் (06152) இயக்கப்படுகிறது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள இன்னொரு அறிவிப்பில், பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை-தாம்பரம் இடையிலான மின்சார ரயில் ரத்து மேலும் நீட்டிக்கப்படுகிறது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "எழும்பூர் ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடை 10, 11-ல் மேற்கூரை அமைத்தல் உள்ளிட்ட மறுசீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் மின்சார ரயில்கள் ரத்து மேலும் நீட்டிக்கப்படுகிறது.
அதன்படி, சென்னை கடற்கரையில் இருந்து வருகிற 12-ந் தேதி அதிகாலை 4.15, இரவு 11, 11.20, 11.40, 11.59 மணிக்கு தாம்பரம் செல்லும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அதே தேதியில், தாம்பரத்திலிருந்து இரவு 10.20, 11, 11.40 மணிக்கு சென்னை கடற்கரை வரும் ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.
செங்கல்பட்டில் இருந்து இரவு 10.20, 11 மணிக்கு சென்னை கடற்கரை வரும் மின்சார ரயில் தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது. அதே போல, சென்னை கடற்கரையில் இருந்து அதிகாலை 3.55 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு வரும் ரெயிலும் சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது. திருமால்பூரில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் ரயில் தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது.
சென்னை கடற்கரையில் இருந்து இன்று (புதன்கிழமை) முதல் வருகிற 15-ந் தேதி வரை இரவு 11.05, 11.30, 11.59 மணிக்கு தாம்பரம் செல்லும் மின்சார ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. சென்னை கடற்கரையில் இருந்து நாளை (வியாழக்கிழமை) முதல் வருகிற 16-ந் தேதி வரை அதிகாலை 3.50, 4.15 மணிக்கு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில் பகுதிநேரமாக சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே ரத்து செய்யப்படுகிறது.
கூடுவாஞ்சேரியில் இருந்து சென்னை கடற்கரைக்கு இன்று முதல் வருகிற 15-ந் தேதி வரை இரவு 9.45, 10.10, 11.15 மணிக்கு வரும் மின்சார ரயில் பகுதிநேரமாக தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே ரத்து செய்யப்படுகிறது. அதே தேதியில், இரவு 10.20, 11 மணிக்கு செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரயில் பகுதி நேரமாக தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே ரத்து செய்யப்படுகிறது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications