வீக் எண்ட்.. சொந்த ஊர் செல்லும் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. 2 ஸ்பெஷல் ரயிலை அறிவித்த ரயில்வே
சென்னை: பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு சென்னை தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு இன்று சிறப்பு ரயில் இயக்கபடும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும் நாளை மறுநாள் அதாவது ஞாயிற்றுக்கிழமையும் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
வரும் திங்கள் கிழமை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனால் மூன்று நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை முகூர்த்த தினம் என்பதால் சொந்த ஊரில் நடைபெறும் சுப நிகழ்சிகளுக்காகவும் மக்கள் டிரவல் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இதனால், சென்னையில் இருந்து மதுரை, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்து அனைத்து பஸ்களும் நிரம்பி வழிகின்றன. தனியார் ஆம்னி பஸ்களிலும் கட்டணம் அதிகமாக இருப்பதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காக தமிழக போக்குவரத்த்து துறை சிறப்பு பேருந்துகளையும் அறிவித்துள்ளது. இந்த நிலையில், பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு சென்னை தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் இயக்கபடும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. சென்னை தாம்பரத்தில் இருந்து இன்றும் நாளை மறுநாள் அதாவது ஞாயிற்றுக்கிழமையும் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
இந்த ரயில் மறு மார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து சனிக்கிழமை மற்றும் திங்கள் கிழமைகளில் இயக்கப்படும். சென்னை தாம்பரத்தில் இருந்து இன்று இரவு 10.20 மணிக்கு கிளம்பும் இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருதாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருது நகர், சாத்தூர், கோவில் பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர் வழியாக நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தை மறுநாள் காலை 11 மணிக்கு சென்று அடையும்.
மறுமார்க்கத்தில் சனி மற்றும் திங்கள் கிழமைகளில் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து சென்னை தாம்பரத்திற்கு கிளம்பும் ரயிலானது நாகர்கோவிலில் இருந்து நண்பகல் 1.20 மணிக்கு கிளம்பும். வள்ளியூருக்கு 1.51 மணிக்கு வரும் இந்த ரயில் ஒரு நிமிடம் நின்று செல்லும். திருநெல்வேலிக்கு 3 மணிக்கு வந்து 3.05 மணிக்கு புறப்பட்டு செல்லும்.
கோவில் பட்டி, சாத்தூர், விருது நகர், மதுரை (5.15 ) திண்டுக்கல், திருச்சி (இரவு 8 மணி , 10 நிமிடங்கள் நிற்கும் விருதாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக தாம்பரத்திற்கு அதிகாலை 3 மணிக்கு வந்து சேரும். முன்பதிவு பெட்டிகளை கொண்ட இந்த ரயிலில் 9 ஸ்லீப்பர் கோச் களும்,11, இரண்டாம் வகுப்பு பெட்டிகளும், 02 இரண்டாம் வகுப்பு (Divyangjan Friendly) பெட்டிகள் இருக்கும்.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications