தென் மாவட்ட மக்களுக்கு ஹாப்பி நியூஸ்.. திண்டுக்கல் நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்! முழு விபரம்!
சென்னை: திண்டுக்கல் மற்றும் நாகர்கோவில் இடையே இயக்கப்படும் ரயில்களில் கூட்ட நெரிசலை குறைக்கும், நோக்கத்தில் தெற்கு ரயில்வே புதிய சிறப்பு ரயில் சேவையை அறிவித்துள்ளது. திண்டுக்கல் - நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில் சேவை, மே 5 முதல் மே 31 வரை, வாரத்தில் திங்கள், செவ்வாய், வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய 5 நாட்களில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே கூறியுள்ளது.
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு செல்ல மக்கள் பெரும்பாலும் ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். குறைந்த செலவில் பாதுகாப்பான பயணத்திற்கு ரயில் பயணமே பயணிகளின் முக்கிய தேர்வாக இருக்கிறது.
பயணிகள் வசதிக்காக தென் மாவட்டங்களில் இருந்து கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், வைகை எக்ஸ்பிரஸ், பாண்டியன் எக்ஸ்பிரஸ், முத்துநகர் எக்ஸ்பிரஸ், தேஜஸ் எக்ஸ்பிரஸ் மற்றும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் தினந்தோறும் இயக்கப்படுகிறது.

இதே போல சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை கரூர் வழியாகவும் தென் மாவட்டங்களுக்கு பல்வேறு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது கோடைக் காலம் மற்றும் பள்ளி விடுமுறையை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்களில் பயணிகள் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துக் காணப்படுகிறது. இந்நிலையில், திண்டுக்கல் மற்றும் நாகர்கோவில் இடையே இயக்கப்படும் ரயில்களில் கூட்ட நெரிசலை குறைக்கும், நோக்கத்தில் தெற்கு ரயில்வே புதிய சிறப்பு ரயில் சேவையை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில்,"திண்டுக்கல் - நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில் சேவை: மே 5 முதல் 31 வரை வாரத்திற்கு 5 நாட்கள் இயக்கப்படும், திண்டுக்கல் மற்றும் நாகர்கோவில் இடையே பயணிக்கும் ரயில்களில் பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்கும் நோக்கத்தில் தெற்கு ரயில்வே புதிய சிறப்பு ரயில் சேவையை அறிவித்துள்ளது.
இந்த சிறப்பு ரயில் 2025 மே 5 முதல் மே 31 வரை, வாரத்தில் திங்கள், செவ்வாய், வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய 5 நாட்களில் இயக்கப்படும். ரயில் எண் 06322 திண்டுக்கல் ஜங்ஷன் - நாகர்கோவில் ஜங்ஷன் இடையே சிறப்பு ரயிலாக இயக்கப்படும். திண்டுக்கல்லில் இருந்து மாலை 3.45 மணி (15.45) புறப்படும் இந்த ரயில், நாகர்கோவிலுக்கு இரவு 9.05 மணி (21.05) சென்றடையும். மே 5 முதல் மே 31 வரை புதன், வியாழன் தவிர அனைத்து நாட்களிலும் இயகப்படும்.
திண்டுக்கல், அம்பத்துறை, கொடைக்கானல் ரோடு, சோழவந்தான், மதுரை ஜங்ஷன், திருப்பரங்குன்றம், திருமங்கலம், விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, கடம்பூர், வஞ்சிமணியாச்சி, நறைக்கிணறு, திருநெல்வேலி, நாங்குநேரி, வள்ளியூர் ஆகிய இடங்களில் இந்த ரயில் நின்று செல்லும். கோயம்புத்தூர் - நாகர்கோவில் இடையே இயக்கப்படும் 16322 எண் ரயில், திண்டுக்கல் முதல் நாகர்கோவில் வரை பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளது. இது, கொடைக்கானல் ரோடு - வாடிபட்டி இடையே சாலை புதுப்பிப்பு பணிகள் நடைபெறுவதால் 2025 மே 31 வரை நடைபெறும். இதனை ஈடுகொடுக்கவே இந்த சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. தவிர, வியாழனில் மட்டும் ரத்து செய்யப்பட்ட 16322 ரயில் வழக்கம்போல் இயக்கப்படும்" என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக்












Click it and Unblock the Notifications