தாம்பரம், சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை செல்ல சிறப்பு ரயில்கள்.. தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு
சென்னை: கோவை ஈரோடு திருப்பூர் சேலம் பகுதி மக்கள் கோடை விடுமுறைக்கு சொந்த ஊர் செல்ல சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தாம்பரம் வழியாக சிறப்பு ரயில் ஒன்றும், சென்னை சென்ட்ரல் வழியாக ஒரு சிறப்பு ரயிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம் வழியாக சிறப்பு ரயில் குறித்து சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது: "பயணிகளின் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. ரெயில் எண்:06043 தாம்பரம்-கொச்சுவேலி சிறப்பு ரெயில் தாம்பரத்தில் இருந்து 31-ந்தேதி மதியம் 2.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.30 மணிக்கு கொச்சுவேலி சென்றடையும். இந்த ரெயில் கோவைக்கு அதிகாலை 1.57 மணிக்கு வந்து 2 மணிக்கு புறப்பட்டு செல்கிறது.

ரெயில் எண் : 06044 கொச்சுவேலி-தாம்பரம் சிறப்பு ரெயில் கொச்சுவேலியில் இருந்து 1-ந்தேதி அன்று மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.55 மணிக்கு தாம்பரம் சென்றடையும். இந்த ரெயில் கோவை ரெயில் நிலையத்துக்கு நள்ளிரவு 12.40 மணிக்கு வந்து 12.45 மணிக்கு புறப்பட்டு செல்கிறது.
சென்னை எழும்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, ஒத்தப்பாலம், திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம், கோட்டயம், சங்கனாச்சேரி, திருவல்லா, செங்கனூர், மாவேலிக்கரா, காயங்குளம், கொல்லம் ஆகிய இடங்களில் நிற்கும். சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு தொடங்கி நடந்து வருகிறது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே சென்னை சென்ட்ரல் வழியாக கோவைக்கு சிறப்பு ரயில் குறித்து தெற்கு ரயில்வே இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் தெற்கு ரயில்வே கூறியிருப்பதாவது: ரயில் எண் 06050 கோவை- சென்னை சென்ட்ரல் இடையே சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் கோவையில் வரும் மார்ச் 31ம் தேதி ஞாயிறு அன்று இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை சென்னை சென்ட்ரலுக்கு 8.30க்கு வரும்.
அதேபோல் ரயில் எண் 06049 ரயில் சென்னை சென்ட்ரலில் இருந்து ஏப்ரல் 1ம் தேதி காலை 10.20க்கு புறப்பட்டு அன்று இரவு 8.25க்கு கோவை சென்றடையும். கோவையில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் ரயில்கள் வழக்கமாக பெரம்பூரில் நிறுத்தப்படும். அந்த வகையில் கோவையில் இருந்து வரும் ரயில் எண் 06050 என்ற சிறப்பு ரயிலும் பெரம்பூரில் நின்று செல்லும். இந்த ரயிலில் 20 ஸ்லீப்பர் கோச்கள் மற்றும் இரண்டு பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இந்த ரயில்கள் திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, சேலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு தொடங்கி உள்ளது.
-
விஜய் அரசின் ட்விஸ்ட்.. கோயம்புத்தூர் சர்வதேச கிரிக்கெட் மைதானம்.. நிலைமை என்ன? -
ஏற்கனவே வேலை நடக்கும் சாலை பணிகளுக்கு.. டெல்லியில் மீண்டும் அனுமதி கேட்ட ஆதவ் அர்ஜுனா? பின்னணி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications