90 பேரின் உயிரை.. கெட்டியாக பிடித்த விமானி! சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு!
சென்னை: சென்னை விமான நிலையத்திலிருந்து கர்நாடக மாநிலத்திற்கு புறப்பட இருந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருக்கிறது. விமானம் புறப்படுவதற்கு சில விநாடிகள் முன்னதாக இதை கண்டறிந்த விமானி, சாமர்த்தியமாக விமானத்தை நிறுத்தி 90 பயணிகளின் உயிரை காப்பாற்றியுள்ளார்.
சமீப காலமாக விமான விபத்துக்கள் பெரும் கவனம் பெற்று வருகின்றன. நன்றாக பறந்துக்கொண்டிருந்த விமானம் திடீரென கீழே விழுந்து விபத்தில் சிக்குவதெல்லாம் ஏன்? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதுவும் அகமதாபாத் விமான விபத்துக்கு பின்னர், விமானிகள் கூடுதல் கவனத்துடன் விமானங்களை கையாள அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

இந்நிலையில்தான் இன்று 90 பேரின் உயிரை விமானி காப்பாற்றியிருக்கிறார். அதாவது சென்னை விமான நிலையத்திலிருந்து கர்நாடக மாநிலம் சிவமோகாவக்கு ஸ்பைஸ் ஜெட் பயணிகள் விமானம், மதியம் 2.50 மணிக்கு புறப்பட இருந்தது. புறப்படுவதற்கு முன்னர் விமானத்தின் பாகங்கள் சரியாக இயங்குகிறதா? என்பது பரிசோதிக்கப்படும். பரிசோதனை முடிந்து, விமானம் எரிபொருள் நிரப்பப்பட்டு, கட்டுப்பாட்டு அறையின் வழிகாட்டுதலுடன் ரன்வேக்கு வந்தது.
இங்கிருந்து கட்டுப்பாட்டு அறையிடம் விமானி அனுமதி வாங்க வேண்டும். எல்லா டேக் ஆஃப்-க்கும் கட்டுப்பாட்டு அறையின் அனுமதி மிகவும் முக்கியம். விமானத்தின் ஓடுதளத்தில் எந்த விமானங்களும் இல்லை என்பதை உறுதி செய்த பின்னர் கட்டுப்பாட்டு அறை, விமானம் டேக் ஆஃப் ஆக அனுமதியளிக்கும். அதன் பின்னர், முழு கன்ட்ரோலும் விமானி கைக்கு வந்துவிடும். விமானி பிரேக்கை பிடித்துக்கொண்டு விமானத்தின் என்ஜினை முழு வேகத்தில் இயக்குவார்.
இந்த நேரத்தில் விமான என்ஜினில் வழக்கத்திற்கு மாறாக ஏதாவது தெரிந்தால் அது உடனடியாக சரி செய்யப்படும். சரி செய்ய முடியவில்லை எனில் டேக் ஆஃப் ரத்து செய்யப்படும்.
இந்த கட்டத்தில்தான் ஸ்பைஸ் ஜெட் விமானி சில தொழில்நுட்ப பிரச்சனைகளை கண்டறிந்துள்ளார். இதனையடுத்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு உடனடியாக விமானம் மேலே எழும்புவது நிறுத்தப்பட்டிருக்கிறது. இதனால் 85 பயணிகள் மற்றும் 5 பணியாளர்கள் என மொத்தம் 90 பேரின் உயிர் காப்பாற்றப்பட்டிருக்கிறது.
ஒருவேளை இதே பிரச்சனையோடு விமானம் டேக் ஆஃப் ஆகியிருந்தால் விபத்தை சந்தித்திருக்கலாம். அதாவது டேக் ஆஃப் மூன்று நடைமுறையாக செயல்படுத்தப்படும்.
1. V1 (Decision Speed)
2. Vr (Rotation Speed)
3. V2 (Take-off Safety Speed)
இதில் முதல் அம்சத்தில், விமானத்தின் என்ஜின் முழு வேகத்தை எட்டியிருக்கும். எனவே விமானி, பிரேக்கை ரிலீஸ் செய்வார். விமானம் வேகமாக ஓடு பாதையில் ஓடும். வேகம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கும். இந்த நேரத்தில் டேக் ஆஃபை ரத்து செய்து, விமானத்தை நிறுத்த முடியாது. ஏனெனில் ஓடுபாதையின் நீளம், வேகமாக ஓடும் விமானத்தை நிறுத்தும் அளவுக்கு போதுமானதாக இருக்காது.
எனவே இரண்டாவது கட்டத்தில் விமானத்தின் மூக்கு பகுதி மேல் நோக்கி உயர்த்தப்படும். இதனால் விமானத்திற்கு லிப்ட் கிடைக்கும். மொத்த விமானமும் கொஞ்சம் கொஞ்சமாக மேலே உயர தொடங்கும்.
இதனையடுத்து விமானம் மூன்றாவது கட்டத்திற்கு செல்லும். அதாவது போதுமான உயரத்தை விமானம் எட்டும் வரை என்ஜின் முழு வேகத்தில் இயங்கிக்கொண்டே இருக்கும். விமானிகள், விமானத்தின் திசையை இந்த நேரத்தில் மாற்றி அமைப்பார்கள்.
இந்த மூன்று நடைமுறையின் போது ஒரு என்ஜின் பெயிலியர் ஆனாலும் விமானத்தை பாதுகாப்பாக காப்பாற்றிவிட முடியும். ஆனால் கொஞ்சம் கஷ்டப்பட வேண்டும். எனவே பறப்பதற்கு முன்னதாகவே தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டு விமானம் நிறுத்தப்பட்டிருப்பது சிறந்த நடவடிக்கை என்று பலரும் பாராட்டி வருகின்றனர்.
-
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications