"சேதமான வீல்".. சென்னை வந்த ஸ்பைஸ்ஜெட் விமானத்துக்கு நேர்ந்த கதி.. திக்திக் நிமிடங்கள்.. என்னாச்சு?
சென்னை: ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் இருந்து சென்னை நோக்கி வானில் வந்து கொண்டிருந்த ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் சக்கரம் சேதமடைந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விமானம் சென்னையை நெருங்கிய நிலையில் சேதமடைந்த சக்கரத்துடன் விமானி சாதுர்யமாக விமானத்தை தரையிறக்கியதால் பயணிகள், விமான பணியாளர்கள் அனைவரும் பத்திரமாக உயிர் தப்பினர்.
வானில் பறப்பதற்கு முன்பே ஒவ்வொரு விமானங்களிலும் ஏதேனும் பிரச்சனைகள் உள்ளதா? என்று பரிசோதிக்கப்படும். ஏனென்றால் வானில் பறக்கும்போது ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அது பயணிகளின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தி விடும்.

இருப்பினும் கூட பல சந்தர்ப்பங்களில் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவதும், அதன்பிறகு அவசர அவசரமாக அருகே உள்ள விமான நிலையங்களில் தரையிறங்குவதும் வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.
இந்நிலையில் தான் அப்படியொரு சம்பவம் சென்னையில் இன்று அதிகாலையில் நடந்துள்ளது. அதாவது ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரான ஜெய்ப்பூரில் இருந்து இன்று ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்கு சொந்தமான SG9046 விமானம் புறப்பட்டது. விமானத்தில் பயணிகள், விமான பணியாளர்கள் இருந்தனர். இந்த விமானம் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது.
இன்று அதிகாலையில் சென்னையை விமான நிலையத்தை விமானம் நெருங்கியது. அப்போது திடீரென்று விமானத்தில் பிரச்சனை ஏற்பட்டது. இதை உணர்ந்த விமானி விமானத்தை உடனடியாக அவசர அவசரமாக சென்னை விமான நிலையத்தில் தரையிறக்க வேண்டும் என்று கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அனுப்பினார். அதன்பிறகு அவசர அவசரமாக ஸ்பைஸ்ஜெட் விமானம் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியது. எந்த அசம்பாவித சம்பவமும் ஏற்படவில்லை. விமானத்தில் இருந்த பணியாளர்கள், பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
மேலும் விமானம் அவசர அவசரமாக தரையிறங்கியது பற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது விமானத்தின் சக்கரம் சேதமடைந்து இருந்தது தெரியவந்தது. விமானம் தரையிறங்கும்போதும், தரையில் இருந்து விமானம் வானில் பறக்கும்போதும் இந்த சக்கரங்கள் தான் முக்கியம். இருப்பினும் சேதமடைந்த சக்கரத்துடன் விமானத்தை விமானிகள் பத்திரமாக தரையிறக்கி அனைவரின் உயிரையும் காப்பாற்றி உள்ளனர்.
-
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு!












Click it and Unblock the Notifications