"அணில் பிரச்சனை.." செல்வப்பெருந்தகை கேட்ட ஒரே கேள்வி.. அடுத்த நொடியே வெடித்து சிரித்த சீமான்
சென்னை: சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையும் சந்தித்தனர். அப்போது சீமானிடம் ""அணில் பிரச்சனை எல்லாம் வேகமாகப் போகின்றதா?" எனக் கேட்டதால் அங்குச் சிரிப்பலை ஏற்பட்டது.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இப்போதே ஆரம்பித்துவிட்டது எனச் சொல்லலாம். எல்லாக் கட்சிகளும் கூட்டணி, தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டன. இதற்கு இடையே அரசியல் தலைவர்களின் எதிர்பாராத சந்திப்புகளும் தொடர்ச்சியாக நடந்து வருகிறது.

சீமான்- செல்வப்பெருந்தகை
அப்படித் தான் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையும் சந்தித்துக் கொண்டனர். இருவரும் கைகளைப் பிடித்தவாறு சில நிமிடங்கள் உரையாற்றிக் கொண்டு இருந்தனர். அப்போது சீமான் தன்னுடன் வந்த பிரமுகர்களைச் செல்வப்பெருந்தகையிடம் அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தார்.
அணில் பிரச்சனை
அவர்களுக்கு வணக்கம் சொன்ன செல்வப்பெருந்தகை, டக்கென சீமானை பார்த்து, "அணில் பிரச்சனை எல்லாம் வேகமாகப் போகின்றதா?" என்று கேட்டார். முதலில் என்ன கேட்கிறார் எனப் புரியாமல் சீமான் குழம்பவே, செல்வப்பெருந்தகை மீண்டும் சொன்னார். இதைக் கேட்டதும் சீமானும் அருகே இருந்தவர்களும் வெடித்துச் சிரித்தனர். இதனால் அங்கு முழுக்க சிரிப்பலை நிலவியது. பிறகு இரு தலைவர்களும் இன்னும் சில நிமிடங்கள் உரையாற்றிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
தொடர்ந்து சீண்டும் சீமான்
கடந்த சில வாரங்களாகவே நாம் தமிழர் கட்சியின் சீமான் தொடர்ச்சியாக விஜய்யை மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறார். விஜய்யை அணில் எனக் குறிப்பிட்டே சீமான் விமர்சிக்கிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு மதுரையில் நடந்த பிரஸ் மீட்டில், விஜய் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குச் சீமான், "அணில் ஜங்கிள், ஜங்கிள் என்று தான் கத்த வேண்டும்.. இப்போது ஏன் அங்கிள் அங்கிள் என கத்துகிறது" எனச் சாடியிருந்தார்.
அதேபோல திருவள்ளூர் மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் மரங்கள் மாநாடு நடந்தது. அதில் பேசிய சீமான், "காட்டிற்குள் புலிகள் நுழைந்தவுடனே ஒரு அணில் கூட கண்ணில் படவில்லை. அணில்களுக்கும் சேர்த்துத் தான் காடுகளை வளர்க்க நாம் பாடுபடுகிறோம்" என்று மீண்டும் தாக்கிப் பேசியிருந்தார். இதுபோல விஜய்யை சீமான் தொடர்ச்சியாகவே தாக்கிப் பேசி வரும் நிலையில், அதைக் குறிப்பிடும் வகையிலேயே செல்வப்பெருந்தகை கேட்டுள்ளார். செல்வப்பெருந்தகை நேரடியாக விஜய் பெயரைக் குறிப்பிடவில்லை என்ற போதிலும், அவர் இதையே சொல்வதாக இணையத்தில் நெட்டிசன்கள் சொல்லி வருகிறார்கள்.
தமிழ்நாடு தேர்தல்
தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், இதில் 4 முனைப் போட்டி ஏற்படும் என்றே தெரிகிறது. திமுக மற்றும் அதிமுக தலைமையில் நிச்சயம் கூட்டணிகள் உருவாகும். மேலும், சீமான் வழக்கம் போலவே தனித்துக் களமிறங்குவார் எனத் தெரிகிறது. இது தவிர விஜய் தலைமையிலும் ஒரு கூட்டணி உருவாகும் என்றே தெரிகிறது. தவெக ஆட்சியை அமைத்தால் அதிகாரத்தில் பங்கு என விஜய் சொல்லி வரும் சூழலில், தேர்தல் நெருங்கும்போது சில கட்சிகள் விஜய்யை நோக்கிச் செல்லக்கூடும் எனச் சொல்லப்படுகிறது.
-
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்!











Click it and Unblock the Notifications