அணில் vs தெர்மாக்கோல்.. கலாய்த்த செல்லூர் ராஜுவுக்கு காட்டமாக பதிலடி கொடுத்த செந்தில் பாலாஜி
சென்னை: சித்திரை திருவிழாவில் அணில்கள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என சட்டப்பேரவையில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவை தெர்மாக்கோல் விஞ்ஞானி என ட்விட்டரில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சித்து உள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது உரையாற்றிய அதிமுகவை சேர்ந்த முன்னாள் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு, மதுரையில் சித்திரைத் திருவிழா நடைபெற்று வருகிறது. எனவே மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் அணில்கள் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்." எனப் பேசினார். செல்லூர் ராஜுவின் இந்த பேச்சால் சட்டப்பேரவையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் வாய்விட்டு சிரித்தனர்.

அப்போது அமைதியாக மவுனம் காத்த மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, தற்போது ட்விட்டரில் பொங்கி இருக்கிறார். அவர் தனது பதிவில், "தமிழ்நாட்டில் மின் தடை இல்லை என தெரிந்து 'தடை வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்' என்கிறார் தெர்மோகோல் விஞ்ஞானி. எங்கள் பணியை நாங்கள் சிறப்பாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். சித்திரை வெயிலில் வைகை நீர் ஆவியாகி விடாமல் தடுக்க உடனடியாக தெர்மோகோல் எடுத்துக் கொண்டு கிளம்புங்கள்." எனப் பதிவிட்டு இருக்கிறார்.
கடந்த ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அடிக்கடி மின் தடை ஏற்பட்டதாக குற்றச்சாட்டு இருந்த நிலையில், அணில் வயர்களை கடிப்பதால் மின் தடை ஏற்படுவதாக செந்தில் பாலாஜி அப்போது அளித்த விளக்கத்தை சுட்டிக்காட்டி செல்லூர் ராஜு தற்போது விமர்சித்து இருக்கிறார்.

Recommended Video
அதேபோல், செல்லூர் ராஜு கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்தபோது மதுரை வைகை அணையின் நீர் ஆவியாகாமல் இருக்க தெர்மாக்கோலுக்கு டேப் ஒட்டி மிதக்கவிட்டது தேசிய ஊடகங்கள் மட்டுமின்றி சீன ஊடகங்கள் வரை பேசுபொருளானது குறிப்பிடத்தக்கது.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications