இலங்கையில் குடியுரிமை.. ஆனால், ஓட்டு போட்டது தமிழ்நாட்டில்! வசமாக சிக்கிய தம்பதி
சென்னை: நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்கள் அதிகமானோர் சிலர் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், இலங்கை குடியுரிமை பெற்ற தம்பதி, தமிழக சட்டமன்ற தேர்தலில் ஓட்டு போட்டிருந்தது தெரிய வந்திருக்கிறது. அவர்கள் மீது காவல்துறை நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது.
பிற நாடுகளில் குடியுரிமை பெற்று, தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்களித்ததாக ஏற்கெனவே 25 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இந்நிலையில், தற்போது இலங்கை தம்பதியினர் சிக்கியிருக்கின்றனர்.

சிக்கியது எப்படி?
வெளிநாட்டினர் சிலர் சட்ட விரோதமாக வாக்களித்துவிட்டு செல்வதாக சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அதிகாரிகள் சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட விமான நிலைய அதிகாரிகளை உஷார் செய்தனர். இதன் தொடர்ச்சியாக வெளிநாட்டு பயணிகள் சோதனை செய்யப்பட்டனர். அதில், ஆள்காட்டி விரலில் மை வைக்கப்பட்டிருந்தவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சட்டவிரோதமாக சிலர் வாக்களித்து கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
25 பேர் கைது
நேற்று வரை மொத்தம் 25 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் இலங்கை குடியுரிமை கொண்டவர்கள். இருப்பினும் பிரிட்டன் உள்ளிட்ட வெவ்வேறு நாடுகளை சேர்ந்தவர்களும் இருக்கின்றனர்.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், "எங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில் 25 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். மேலும் விசாரணைய நீடித்து வருகிறது" என்று கூறியிருக்கின்றனர்.
தமிழகம் வந்த வெளிநாட்டினர்
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் வெளிநாட்டினர் பலர் இந்தியாவுக்கு வந்திருக்கின்றனர். அவர்களில் சிலர் சட்ட விரோதமாக வாக்களித்துள்ளனர் என அதிகாரிகள் கூறியிருக்கின்றனர்.
இந்நிலையில் இன்று காலை இலங்கையை சேர்ந்த தம்பதியை போலீசார் கைது செய்திருக்கின்றனர். மதுரை பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த முகமது சபீர் மற்றும் அவரது மனைவி அமீனா பேகத்திடம் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டபோது அவர்கள் கையில் ஒட்டு போட்டதற்கான சான்றாக வைக்கப்படும் கருப்பு மை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
வசமாக சிக்கிய தம்பதி
இதனையடுத்து அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், இருவரும் இலங்கை குடியுரிமை பெற்றது தெரிய வந்திருக்கிறது. இருப்பினும், தமிழ்நாடு முகவரியில் ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை வைத்திருந்திருக்கின்றனர். எனவே விமான நிலைய அதிகாரிகள் அவனியாபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்திருக்கின்றனர்.
தகவலின் பேரில் போலீசார் இருவரிடமும் மேற்கொண்ட விசாரணையில், இருவரும் வெளிநாட்டு குடியுரிமை பெற்று தமிழ்நாட்டில் வாக்களித்தது தெரிய வந்தது. இதனையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்திருக்கின்றனர்.
-
பத்திரப்பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்! தமிழக அரசு அதிரடி! -
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
பூட்டிய வீட்டில்.. பேராசிரியர் இருந்த கோலம்! 1400 கி.மீ டிராவல் செய்து வந்து சம்பவம் செய்த தம்பதி! -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
கரப்பான் பூச்சி கட்சி போராட்டம்.. வேலையை காட்டிய டெல்லி போலீஸ்! 6 பேர் அதிரடி கைது! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங்












Click it and Unblock the Notifications