இலங்கை கடற்படை அட்டூழியம்! கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த 3 தமிழக மீனவர்கள் கைது!
சென்னை: கச்சத்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 3 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளனர். இது போல் தொடர்ந்து இலங்கை கடற்படை அட்டூழியம் செய்து வரும் நிலையில் இதற்கு எப்போதுதான் விடிவு என மீனவர்கள் கேள்வி எழுந்துள்ளது.
தமிழகம், புதுவையைச் சேர்ந்த மீனவர்கள் எல்லைத் தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி இலங்கை கடற்படையினரால் அவ்வப்போது தமிழக மீனவர்கள் அநியாயமாக கைது செய்யப்படுவது வழக்கம். அது போல் அவர்களது படகுகளை சேதப்படுத்துவது, வலைகளை அறுப்பது உள்ளிட்ட செயல்களிலும் அவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று இரவு நெடுந்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி 3 மீனவர்களை கைது செய்து அழைத்துச் சென்றனர். மேலும் அவர்களது படகையும் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு கொண்டு சென்று இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். மீனவர்கள் கைதான சம்பவம் மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது போல் மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்ந்து கொண்டே இருப்பதால் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கச்சத்தீவை மீட்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications