ராமேஸ்வரம் மீனவர்களை நடுக்கடலில் சிறை பிடித்த இலங்கை கடற்படை.. தங்கச்சி மடத்தில் கொந்தளிப்பு
ராமநாதபுரம்: நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை படகுடன் இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 8 மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை. இதையடுத்து மீனவர்களின் உறவினர்கள் தங்கச்சிமடத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அண்மையில் 14 தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட நிலையில் மீண்டும் இலங்கை கடற்படையினர் அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. அதோடு மீனவர்களின் விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழல் நிலவி வருகிறது.
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திடவும் வலியுறுத்தி பிரதமர் மோடி மற்றும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார். இதற்கிடையே மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்களும் தற்போது அரங்கேறி வருகின்றன.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் சுமார் 400 பேர் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து உரிய அனுமதிச் சீட்டு பெற்று மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். அதன்படி கச்சத்தீவு அருகே உள்ள வடக்கு மன்னார் கடற்பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் 8 பேரைச் சுற்றிவ ளைத்து விசைப் படகுடன் கைது செய்துள்ளனர்.
அதன் பின்னர் மீனவர்கள் 8 பேரும் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து மீனவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமேஸ்வரம் மற்றும் பாம்பன் பகுதியைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் 14 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது 8 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேரை இலங்கை
கடற்படை சிறைபிடித்ததை கண்டித்து தங்கச்சிமடத்தில் மீனவர்கள் குடும்பத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மீனவர்கள் மற்றும் மீனவர்களின் உறவினர்கள் தங்கச்சிமடத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு, இலங்கை அரசுக்கு எதிராக மீனவர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.
-
மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது! -
ADMK Candidate list: 167 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? முழு பட்டியல்! -
கொளத்தூரை விட்டுவிட்டு தொகுதி மாறிய ஆதிராஜாராம்! சேப்பாக்கத்தில் உதயநிதியை எதிர்த்து போட்டி -
ஒரு பக்கம் கொளுத்தும் வெயில்.. இன்னொரு பக்கம் இடி, மின்னலுடன் மழை! தமிழகத்தின் நிலை இதுதான்! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்?












Click it and Unblock the Notifications