இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்.. தமிழக மீனவர்களை தாக்கி பொருட்கள் கொள்ளை.. ஷாக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வேதாரண்யம் அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருந்த நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். மீனவர்களை தாக்கி அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கியதில் காயம் அடைந்த மீனவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. வாழ்வாதாரத்திற்காக உயிரை பணயம் வைத்து கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களின் நிம்மதியை இலங்கை கடற்படையும் அவ்வப்போது கெடுத்து விடுகிறது.

Nagai fishermen Sri Lanka

எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி அவ்வப்போது தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வதும், அவர்களின் பொருட்களை சேதப்படுத்துவதும் தொடர் கதையாகி வருகிறது. இலங்கை கடற்படையினரின் அத்து மீறிய செயலுக்கு தமிழக அரசும் கடும் கண்டனத்தை பதிவு செய்வதோடு, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறது.

ஒருபக்கம் இலங்கை கடற்படையினர் மீனவர்களை கைது செய்யும் படலம் நடந்து கொண்டு இருக்க மற்றொரு பக்கம் இலங்கை கடற்கொள்ளையர்களும் மீனவர்களை தாக்கி அவர்களின் பொருட்களை அள்ளி செல்லும் அதிர்ச்சிகர சம்பவங்கள் நடைபெறுகின்றன. இந்த நிலையில், வேதாரண்யம் அருகே கோடியக்கரை தென்கிழக்கு கடல் பகுதியில் தமிழக மீனவர்கள் பிடித்து கொண்டிருந்துள்ளனர்.

அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் தமிழக மீனவர்களை தாக்கி, அவர்களிடம் இருந்த 2 லட்சம் மதிப்புள்ள மீன் பிடி பொருட்களை பறித்து சென்றுள்ளனர். இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கியதில் காயம் அடைந்த மீனவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மீனவர்களை கத்தி, கம்பால் தாக்கிவிட்டு படகில் இருந்த ஜிபிஎஸ் கருவி, மீன்கள், வலைகள், செல்போன் ஆகியவற்றை இலங்கை கடற்படையினர் கொள்ளையடித்து சென்றதாக பாதிக்கப்பட்ட மீனவர் தெரிவித்தார். கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியது தொடர்பாக வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+