ஸ்ரீபெரும்புதூரில் டிஆர் பாலுவுக்கு வெற்றி.. அதிமுக- தமாகவுக்கு விழும் அடி - தந்தி டிவி Exit Poll
சென்னை: தமிழகத்தில் உள்ள முக்கிய லோக்சபா தொகுதியான ஸ்ரீபெரும்புதூரில் மீண்டும் திமுக வேட்பாளர் டிஆர் பாலு வெற்றி பெறுவார் என்று தந்தி டிவியின் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நம் நாட்டில் மொத்தம் 543 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இதில் மத்தியில் ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 272 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இந்நிலையில் தான் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டது.

முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடந்தது. இதில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதிக்கு அன்றைய தினம் ஓட்டுப்பதிவு நடந்தது. அதன்பிறகு 6 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்தது. இன்று 7 வது மற்றும் கடைசி கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
இதில் பதிவாகி உள்ள ஓட்டுகள் ஜுன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. அன்றைய தினம் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படுகிறதா? இல்லாவிட்டால் மீண்டும் பாஜக ஆட்சியை தொடர்கிறதா? என்பது தெரிந்துவிடும். இந்நிலையில் தான் இன்று லோக்சபா தேர்தல் முடிவடைந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய பல்வேறு கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன.
அதன்படி தந்தி டிவி நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பின் முடிவுகள் தொகுதி வாரியாக வெளியாகி வருகிறது. அந்த வகையில்
ஸ்ரீபெரும்புதூர் லோக்சபா தொகுதிக்கான ரிசல்ட் வெளியாகி உள்ளது. ஸ்ரீபெரும்புதூர் லோக்சபா தொகுதியில் திமுக சார்பில் டிஆர் பாலு, அதிமுக சார்பில் பிரேம் குமார், பாஜக கூட்டணி சார்பில் தமாக வேட்பாளர் வேணுகோபால், நாம் தமிழர் சார்பில் ரவிச்சந்திரன் ஆகியோர் போட்டியிட்டுள்ளனர். இதில் திமுக வேட்பாளர் டிஆர் பாலு தான் வெற்றி பெறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது டிஆர் பாலுவுக்கு 44 சதவீத ஓட்டுகள் கிடைக்க வாய்ப்புள்ளதாக தந்தி டிவியின் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தப்படியாக அதிமுக வேட்பாளர் பிரேம் குமாருக்கு 29 சதவீத ஓட்டுகளும், பாஜக கூட்டணியின் தமாக வேட்பாளர் வேணுகோபாலுக்கு 13 சதவீத ஓட்டுகளும் கிடைக்கும் என தந்தி டிவியின் கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications