பக்தர்களுக்கு ஃபுல் பாட்டில் சரக்கு.. ரூ.1000 புதன்கிழமை.. செவ்வாய் ரூ.300.. பகீர் சாமியார் வீடியோ
குறி சொல்லும் சாமியார் மீது பொதுமக்கள் நடவடிக்கை கோருகிறார்கள்
சென்னை: ஸ்ரீபெரும்புதூர் அருகே ஒரு சாமியார் தன்னிடம் வரும் பக்தர்களிடம் ஃபுல் பாட்டில் மது அருந்த சொல்கிறாராம்.. இந்த சம்பவம்தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
என்னதான் விஞ்ஞானம் வளர்ந்தாலும், தொழில் துறை வளர்ந்தாலும், கல்வியறிவு வளர்ந்தாலும், மூடநம்பிக்கைகள் முழுமையாக நம்மை விட்டு போகவில்லை.
பொதுமக்கள் தங்கள் குடும்ப பிரச்னைகளை தீர்க்க கோரி, எத்தனையோ வழிவகைகளை தேர்ந்தெடுத்து கொள்கின்றனர்..

குறி
சிலர் கோவில்களுக்கு சென்று நேர்த்திக்கடன் செலுத்தி பிரச்சனைகள் தீர வேண்டும் என்று வேண்டி கொள்கிறார்கள்.. மேலும் சிலர் நாடி ஜோதிடம், சித்தர்களை சென்று சந்திப்பார்கள்.. மேலும் சிலர் பில்லி, சூனியம், நரபலி என்ற உச்சத்துக்கும் போவார்கள்.. மேலும் சிலர் குறி கேட்டு, அதன்படி நடப்பார்கள். இன்னமும்கூட கிராமப்புறங்களிலும், அம்மன் கோவில்களிலும் குறி சொல்பவர்கள் பெருகி இருக்கிறார்கள்.. சில இடங்களில் திருநங்கைகளும் குறி சொல்கிறார்கள்..

சுருட்டு
குறி சொல்வது ஒரே மாதிரிதான் என்றாலும், இவர்கள் சொல்லும் வகைகள் வேறு வேறு வகையாக இருக்கும்.. டான்ஸ் ஆடிக் கொண்டு சொல்வார்கள், சுருட்டு பிடித்து கொண்டு சொல்வார்கள், சாமியாடிக் கொண்டு சொல்வார்கள்.. ஆனால், காஞ்சிபுரம் மாவட்டம் , ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ளவர் வித்தியாசமான முறையில் குறி சொல்கிறார்.

மணி
நெமிலி என்ற கிராமத்தில் அவர் குறி சொல்கிறார்.. அவர் பெயர் மணி.. ஆந்திராவை சேர்ந்தவர்.. 10 வருடத்துக்கு முன்பேயே இங்கு வந்து, கோவில் முன்பு உட்கார்ந்து குறி சொல்கிறார்.. புதன்கிழமைகளில் ஸ்பெஷலாக குறி சொல்வாராம்.. அன்றைய தினம் இவருக்கு கட்டணம் 1000 ரூபாய்.. செவ்வாய்கிழமை ரூ.300 மட்டுமே காணிக்கையாம்..

அதிர்ச்சி
இவரிடம் குறி கேட்க வரும் நபர்களுக்கு ஒரு புல் பாட்டில் மது கொடுத்து குடிக்க சொல்கிறாராம்.. அப்போதுதான் குறி சொல்வேன் என்றும் பிடிவாதம் பிடிக்கிறாராம்.. இப்படி தன்னை நாடி வரும் நபரை மது குடிக்க வைத்து, அவர் தள்ளாடும் காட்சிகள் வீடியோவாகவும் வெளியாகி அதிர்ச்சியை கூட்டி உள்ளது..

கோயில்
இதை அங்கு வரும் நூற்றுக்கணக்கான பொதுமக்களும் வேடிக்கை பார்த்தபடியே செல்கிறார்கள்.. குறி கேட்டு செல்லும் யாருமே மது குடிக்க மாட்டோம் என்றும் மறுப்பு சொல்வதில்லையாம்.. இவரிடம் குறி கேட்க, கார் உள்ளிட்ட வாகனங்கள் வரிசை கட்டி எந்நேரமும் நிற்கும் என்கிறார்கள்.. இவரே அந்த கோயிலை சொந்தமாக எழுப்பி அதன் அருகே உட்கார்ந்துள்ளார்.. இவர் குறி சொல்லும்போது, மஞ்சள் ஆடை தரித்த பெண்கள் பொங்கலிடுவார்களாம்.. அவர்களுக்கு நடுவே தனக்கான பீடத்தில் உட்கார்ந்து கொண்டுதான் குறி சொல்வாராம்.

கோரிக்கை
இப்படித்தான் தன்னை நாடி வந்த ஒருவருக்கு புல் மது ஊற்றி குடிக்க செய்துவிட்டார்.. அந்த நபரோ முழு பாட்டிலை குடித்துவிட்டு, தன்னிலை மறந்து இந்த சாமியாருக்கே விபூதி அடித்துள்ளார்.. அந்த காட்சியும் வெளியாகி உள்ளது.. இதெல்லாம் சரிதானா? மதுவை கட்டாயப்படுத்தி அருந்த செய்யலாமா? உண்மையிலேயே அது மதுதானா? என்ற சந்தேகங்கள் எழுவதுடன், இதையெல்லாம் போலீசார் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளும் பொதுமக்களிடம் எழுந்துள்ளது..!












Click it and Unblock the Notifications