பத்தாம் வகுப்பு பாஸ் பண்ணிட்டீங்களா?.. பள்ளிகளில் இன்று முதல் ஒரிஜினல் மார்க் ஷீட் கிடைக்கும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சியடைந்த மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளில் இருந்து அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், கடந்த ஏப்ரல் 6ம் தேதி முதல் ஏப்ரல் 20ஆம் தேதி வரை நடந்த 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வில் சுமார் 9 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள்கலந்து கொண்டு தேர்வை எதிர்கொண்டனர். இத்தேர்வின் முடிவானது கடந்த மே மாதம் வெளியிடப்பட்டது.

SSLC Original marksheets to be distributed in TN from Today

இந்நிலையில் ஏப்ரல்‌ 2023 பத்தாம்‌ வகுப்பு பொதுத்‌ தேர்வினை எழுதிய அனைத்து மாணவர்களுக்கும்‌ இன்று காலை 10.00 மணி முதல்‌ அந்தந்தப்‌ பள்ளித்‌ தலைமை ஆசிரியர்கள்‌ மூலம்‌ அசல்‌ மதிப்பெண்‌ சான்றிதழ்கள்‌ விநியோகம்‌ செய்யப்படும்‌. தனித்தேர்வர்கள்‌ தங்களது மதிப்பெண்‌ சான்றிதழ்களை தாங்கள்‌ தேர்வு எழுதிய தேர்வு மையத்திலேயே பெற்றுக்‌ கொள்ளலாம்.

எஸ்எஸ்எல்சி தேர்வு எழுதிய பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்கள் வாயிலாகவும் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

அதேபோல, பத்தாம் வகுப்புதுணைத் தேர்வு எழுதியவர்களில் மறுகூட்டல் கோரி விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றமுள்ள மாணவர்களின் பதிவெண் பட்டியல் இன்று பிற்பகல் வெளியிடப்படுகிறது. அதன் விவரங்களை மாணவர்கள் தேர்வுத் துறையின் www.dge.tn.gov.in எனும் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+