இதாங்க தமிழ்நாடு! வடக்கே சிறுநீர், நிர்வாண கொடுமை..தெற்கே -ரூ.79 கோடி திட்டத்தால் பழங்குடிகள் ஹேப்பி
சென்னை: மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு வட மாநிலங்களில் பழங்குடி மக்கள் பல்வேறு துயரங்களுக்கு ஆளாகி வரும் நிலையில் தமிழ்நாடு அரசோ 1500 குடும்பங்களுக்கு வீடுகளை கட்டிக்கொடுப்பது நெகிழ வைத்துள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன் உலகையே அதிர வைத்த பழங்குடிகளுக்கு இந்தியாவையே அதிர வைத்த மணிப்பூரை சேர்ந்த குக்கி பழங்குடியின பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோ. அதற்கு ஒரு மாதம் முன்பாக மத்திய பிரதேசத்தில் பழங்குடியின நபர் மீது பாஜக ஆதரவாளர் சிறுநீர் கழிக்கும் கொடுமை நடந்தது.

இப்படி பழங்குடி மக்கள் நிம்மதியாக வாழும் வாய்ப்பே பல்வேறு வட மாநிலங்களில் வழங்கப்படுவது கிடையாது. இந்த நிலையில்தான், தமிழ்நாட்டில் பொருளாதாரத்தில் பின்தங்கிய வீடற்ற 1000 பழங்குடியினர் குடும்பங்கள் மற்றும் தற்போது பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள 500 நரிக்குறவர் குடும்பங்கள் என மொத்தம் 1500 குடும்பங்களுக்கு ரூ.45.00 கோடி மதிப்பீட்டில் தகுதியின் அடிப்படையில் வீடுகள் கட்டித் தரப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "விளிம்பு நிலை மக்களுக்கான பொருளாதார முன்னேற்றமே அவர்களுக்கான சமூக நீதியாக அமையும் என்பதில் உறுதியான நம்பிக்கை உடைய மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் எண்ணத்திற்கு உரு கொடுக்கும் வகையில், 2023-2024 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின் மீது மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் திருமதி.என்.கயல்விழி செல்வராஜ் அவர்களால் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன் தொடர்பாக கீழ்க்கண்ட அறிவிப்பு வெளியிடப்பட்டது.
"பொருளாதாரத்தில் பின்தங்கிய வீடற்ற 1000 பழங்குடியினர் குடும்பங்கள் மற்றும் தற்போது பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள 500 நரிக்குறவர் குடும்பங்கள் என மொத்தம் 1500 குடும்பங்களுக்கு வீடுகள் ரூ.45.00 கோடி மதிப்பீட்டில் தகுதியின் அடிப்படையில் கட்டித் தரப்படும்"
2. மேற்காணும் அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில், 2023-2024 ஆம் ஆண்டில் பொருளாதாரத்தில் பின்தங்கிய வீடற்ற 1000 பழங்குடியினர் குடும்பங்கள் மற்றும் தற்போது பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள 500 நரிக்குறவர் குடும்பங்கள் என மொத்தம் 1500 பழங்குடியினர்களுக்கு தமிழ்நாட்டில், 19 மாவட்டங்களில் வீடுகள் கட்டுவதற்கு ரூ.79,28,40,000/- (ரூபாய் எழுபத்து ஒன்பது கோடியே இருபத்து எட்டு இலட்சத்து நாற்பதாயிரம் மட்டும்) நிதி ஒதுக்கீடு செய்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
3. மேற்கண்ட 1500 வீடுகளை விரைந்து கட்டி முடித்திட தேவையான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications