சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் நடந்த மாணவி சத்யபிரியா படுகொலை! டிசம்பர் 27ம் தேதி தீர்ப்பு
சென்னை: சென்னை கல்லூரி மாணவி சத்யபிரியா கொலை வழக்கில் சதீஷ் என்ற இளைஞர் கைதான நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு டிசம்பர் 27-ஆம் தேதி வழங்கப்படுகிறது. இதுவரை 70 சாட்சியங்களிடம் விசாரணை நடைபெற்றது.
இந்த கொலை சம்பவம் 2022 ஆம் ஆண்டு நடந்தது. தன்னை சத்யா காதலிக்கவில்லை என்பதால் அவரை பரங்கிமலை ரயில் நிலையத்தில் வைத்து வாக்குவாதம் செய்த சதீஷ், ரயில் வரும் நேரத்தில் தள்ளிவிட்டதால் அந்த பெண் இறந்தார்.

சென்னை ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றியவர் மாணிக்கம். இவருடைய மகள் சத்யபிரியா. அதே பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் தயாளனின் மகன் சதீஷ் (23).
இவர் சத்யபிரியாவை ஒரு தலையாக காதலித்து வந்ததாக தெரிகிறது. இதனால் அவ்வப்போது சத்யாவை நேரில் சந்தித்து தன்னை காதலிக்குமாறு சதீஷ் தொல்லை கொடுத்ததாகவும் தெரிகிறது.
இப்படித்தான் கடந்த 2022 ஆம் ஆண்டு கல்லூரிக்குச் செல்ல சென்னை பரங்கிமலை ரயில்நிலையத்திற்கு சத்யபிரியா வந்தார். அப்போது அங்கு சதீஷும் வந்தார். ரயில் வரும் வரை காத்திருந்த சத்யபிரியாவிடம் போய் தன்னை காதலிக்குமாறு சதீஷ் வற்புறுத்தியுள்ளார்.
அதற்கு சத்யபிரியா, "என் வீட்டில் வேறு மாப்பிள்ளை பார்த்துவிட்டார்கள். என்னால் உன்னை காதலிக்க முடியாது. என் பின்னால் சுற்றுவதை நிறுத்திவிடு" என சொல்லியுள்ளார். ஆனாலும் சதீஷ் விடாமல் திரும்ப திரும்ப கேட்க, சத்யபிரியா மறுக்க சதீஷுக்கு கோபம் வந்துவிட்டது.
அந்த நேரம் பார்த்து ரயில் வந்தது. அப்போது சத்யபிரியாவை தள்ளிவிட்டார். இதனால் அந்த பெண் ரயில் மோதி இறந்துவிட்டார். இந்த வழக்கில் சதீஷ் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வந்தது.
இந்த வழக்கில் 70 சாட்சிகளிடம் சிபிசிஐடி காவல் துறை விசாரணை நடத்தி முடித்தது. இந்த நிலையில் வழக்கை விசாரித்த நிறைவடைந்துள்ள நிலையில் வரும் 27ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது. இந்த தீர்ப்பு இப்படி பெண்களை ஒரு தலைக்காதலால் அழிக்க நினைப்போருக்கு பாடமாக இருக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எண்ணமாக இருக்கிறது. சதீஷுக்கு எந்த மாதிரியான தண்டனை தர வேண்டும் என்பதை கமென்ட்டில் சொல்லுங்கள்.
-
சட்டம் ஒழுங்கில் பெரிய ஓட்டை.. நாமக்கல்லில் தலைதூக்கிய துப்பாக்கி கலாச்சாரம்! 20 சவரன் நகை அபேஸ்! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications