ஸ்டாலின் மிஸ் பண்ணிட்டாரே.. 2 அறிவிப்புகளை காணோமே.. நம்பிக்கையுடன் முதல்வரை எதிர்நோக்கும் மக்கள்
2 முக்கிய அறிவிப்புகள் அரசு அறிவித்த பொங்கல் தொகுப்பில் இடம்பெறவில்லை
சென்னை: இந்த ஆண்டு பொங்கல் தொகுப்பில், கரும்புத் துண்டு இல்லை.. இதே போல் கடந்த ஆண்டைபோல் பொங்கல் பரிசுத்தொகை பற்றிய அறிவிப்பும் இல்லை..பெரிதும் எதிர்பார்ப்பில் இருந்த தமிழக மக்களுக்கு இது ஏமாற்றத்தை தந்து வருவதாகவே கூறப்படுகிறது.
2022ம் ஆண்டு தைப் பொங்கலை சிறப்பாகக் கொண்டாடிட, அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கிட முதல்வர் ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.
அந்த தொகுப்பில், பொங்கலுக்குத் தேவையான பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும், பண்டிகைக் கால சமையலுக்குத் தேவையான மஞ்சள்தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகைப் பொருட்களும் அடங்கிய துணிப்பை (20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு) 2,15,48,060 குடும்பங்களுக்கு, மொத்தம் ஆயிரத்து 88 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

தமிழக மக்கள்
அரசின் இந்த அறிவிப்பு பரவலாக தமிழக மக்களிடையே பெருத்த வரவேற்பை பெற்று வருகிறது என்றாலும், 2 விதமான அதிருப்திகளையும் தாங்கி வருகிறது.. முதலாவதாக, பொங்கல் தொகுப்பில் கரும்பு துண்டு இல்லை.. பொங்கல் என்றாலே முதலிடத்தை பெறுவது கரும்புதான்.. உழவர்களின் வாழ்வில் இனிமை பொங்க வேண்டும் என்பதை உணர்த்தவே, கரும்பு வழங்கப்படுவது வழக்கம்.. இந்த முறை கரும்பு மிஸ் ஆகி உள்ளது சற்று ஏமாற்றத்தையே தந்துள்ளது... மேலும் இது விவசாயிகள் தரப்பில் பெருத்த அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது..

விவசாயிகள்
அதனால்தான், தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் தொகுப்பில் கரும்பு இடம்பெறாத நிலையில் அதனையும் தொகுப்பில் சேர்க்க விவசாயிகள் கோரிக்கை விடுக்க ஆரம்பித்துள்ளனர்... திமுக மீது ஏற்கனவே கரும்பு விவசாயிகளுக்கு வருத்தம் உள்ளது.. தேர்தல் அறிக்கையில், தாங்கள் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், கரும்புக்கு டன்னுக்கு 4000 ரூபாய் கொள்முதல் விலை வழங்குவோம் என்று வாக்குறுதி தந்திருந்தனர்..

திமுக
அதனால்தான், பெரும்பாலான விவசாயிகள் நம்பிக்கையோடு திமுகவுக்கு வாக்களித்தனர்.. எனினும், நடந்து முடிந்த வேளாண் பட்ஜெட்டில் 2,750 ரூபாயிலிருந்து 2,900 ரூபாய் மட்டுமே கரும்பு விலை உயர்த்தப்பட்டது.. சர்க்கரை ஆலைகள் 1,200 கோடி ரூபாய்க்கும் மேல் நிலுவை வைத்துள்ள நிலையில், அதனை பெற்றுத் தருவது குறித்தும் எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை... இப்படி ஏற்கனவே ஏமாற்றத்தில் விவசாயிகள் உள்ள நிலையில், பொங்கல் தொகுப்பில் கரும்பு இடம்பெறவில்லை என்று கோரிக்கை வைத்தனர்.. ஆனால், கோரிக்கை வைத்த அடுத்த சில நிமிடங்களிலேயே முழு கரும்பும் இடம்பெறும் என்று அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளது நிம்மதியை தந்துவருகிறது.

அறிவிப்பு
அதேபோல, பரிசு தொகை பற்றிய அறிவிப்பு எதையும் முதல்வர் ஸ்டாலின் இந்த முறை வெளியிடவில்லை.. கடந்த 2014ம் ஆண்டு முதல் பொங்கல் பண்டிகையின்போது, பரிசுதொகை வழங்கும் பழக்கத்தை ஏற்படுத்தியதே மறைந்த ஜெயலலிதாதான்.. ரூ.100 ரொக்கத் தொகையுடன் பொங்கல் வைப்பதற்காக ஒரு கிலோ அரிசி, சர்க்கரை வழங்கப்படும் என்று அப்போது அறிவித்தார்.

பரிசு தொகுப்பு
ஆனால், இது அடுத்தடுத்த ஆண்டுகளில் நிதி நிலைமை போன்ற காரணங்களுக்காக பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுவிட்டது.. இதன்பிறகு 2018-ல் பொங்கல் பண்டிகையில் இருந்து பரிசு தொகை வழங்கும் நடைமுறை தொடர்ந்து வருகிறது. 2019-ல் அரிசி, சர்க்கரை 2 அடி நீள கரும்பு, முந்திரிதிராட்சைகள் அளிக்கப்பட்டன.. அத்துடன் 1000 ரூபாய் ரொக்கத் தொகையுடன் பரிசு தொகுப்பு அளிக்கப்பட்டது.. அதாவது 2014-ல் தந்த 100 ரூபாய் ரொக்கமானது, அடுத்த ஏழு ஆண்டுகளில் 10 மடங்கு அதிகரித்து, 1000 ரூபாயாக உயர்ந்தது.
கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி, 2500 ரூபாய் அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் வழங்கப்படும் என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.. ஆனால், தேர்தலை மனதில் கொண்டே அதிமுக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டதாக திமுக பிரச்சனையை கிளப்பியது.. திமுக தலைவர் அறிக்கை விட்டு கண்டித்தார்.. ஆர்எஸ் பாரதி இந்த அறிவிப்பை தடை செய்வதற்காக கோர்ட்டுக்கே போய்விட்டார்.

வரவேற்பு
பொங்கல் பரிசு அரசு கஜானாவில் இருந்து வருகிறது. அது மக்களின் வரிப்பணம்.. அது மக்களுக்கே திரும்பிப் போவதைத் திமுக வரவேற்கிறது என்றாலும், தேர்தலுக்காக இதை எடப்பாடி பழனிசாமி கையாள்கிறார் என்று திமுக தலைவர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டி இருந்ததையும் மறுக்க முடியாது.

பரிசுத் தொகை
எனினும் 2500 ரூபாய் பரிசுத் தொகையானது, பெருத்த மகிழ்ச்சியை அப்போது தமிழக மக்களுக்கு ஏற்படுத்தியிருந்தது.. முக்கியமாக, தங்களுக்கு 2500 ரூபாய் வேண்டாம் என்று யாருமே சொல்லவில்லை. மக்களின் வரிப்பணம் என்று ஏற்கனவே இதை ஸ்டாலின் தன்னுடைய அறிக்கை மூலம் தெரிவித்திருந்த நிலையில், இப்போது ஏன் அதே வரிப்பணத்தை மக்களுக்கு பரிசுத்தொகையாக வழங்கவில்லை என்ற கேள்வி எழுகிறது..

வருத்தம்
அதுமட்டுமல்ல, பதவி ஏற்றதுமே, பெண்களுக்கு பஸ்களில் இலவச பயணம் உட்பட ஏராளமான அறிவிப்பை வெளியிட்ட திமுக அரசு, வருடாவருடம் கிடைத்துவரும் பரிசுத்தொகையை இந்த முறையை அளிக்காமல் தவறவிட்டது பெரும் ஏமாற்றத்தை தந்து வருகிறது.. ஏற்கனவே தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட இல்லத்தரசிகளுக்கான 1000 ரூபாய் என்ன ஆனது? எப்போது வரும் என்று தெரியாத சூழலில், வருடா வருடம் கிடைத்து வரும் பரிசுத்தொகையையும் இல்லாமல் போக செய்வது வேதனையாக உள்ளதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். பொங்கல் வருவதற்குள் இதற்கு மாற்று ஏற்பாடு ஏதாவது முதல்வர் ஸ்டாலின் செய்வாரா?
-
கலைஞர் மகள் கனிமொழிக்கே சீட் இல்லை.. உதயநிதிக்கும் சிக்கல் வரும்னு பயம்! விளாசிய நாம் தமிழர் சீமான்! -
காங்கிரஸை நாயுடன் ஒப்பிட்ட நடிகர் போஸ் வெங்கட்! கைநழுவும் அறந்தாங்கி தொகுதி சீட்? டென்ஷன் -
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
2021ல் வென்ற தொகுதிகள் கூட அதிமுகவுக்கு கிடைக்காது.. சென்னையில் இன்னும் மோசம்.. சர்வேயில் அதிர்ச்சி -
“ஒரு கார் வாங்குற தகுதி கூட கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா?”.. பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்! -
கண் சிவந்த ஸ்டாலின்.. அறிவாலயத்தில் இருந்து பறந்த உத்தரவு.. அதிர்ச்சியில் திமுக நிர்வாகிகள் -
VCK: இரட்டை இலக்கம் + 2028ல் ஒரு மாநிலங்களவை! விசிக தீர்மானம்! என்ன செய்ய போகிறார் திருமாவளவன்? -
ஸ்பெக்ட்ரம் ஊழல் புகார்.. லத்திகா சரண் சர்ச்சை?: எதிர்க்கட்சி தகுதி இழந்த திமுக - 2011ல் ஜெ ஆட்சி! -
நெய்வேலி மண்ணின் மைந்தன் திருமால்வளவன் அந்த வீடியோ! வேல்முருகன் திமுக-பாமக கோட்டை தகர்க்க பிளான் -
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications