8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது பதிந்த வழக்குகள் வாபஸ்.. மு.க. ஸ்டாலின் அதிரடி
சென்னை: 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது பதியப்பட்டுள்ள வழக்குகள் திரும்ப பெறப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
Recommended Video
சட்டசபை கூட்டத் தொடரில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில் நீதிக்கட்சியின் தொடர்ச்சி பேரறிஞர் அண்ணா...
அண்ணாவின் தொடர்ச்சி கலைஞர்... கலைஞரின் தொடர்ச்சி நான்...

கொள்கை திட்டம்
ஐந்தாண்டு ஆட்சி செய்யும் அரசு, கொள்கை திட்டங்கள் அனைத்தையும் ஆளுநர் உரையில் சொல்லிவிட முடியாது. ஆளுநர் உரை முன்னோட்டம்தான் அதாவது ஆளுநர் உரை டிரெய்லர் தான். முழு நீள திரைப்படத்தை திரையில் காண்பர் என்பது போல, மேற்கொண்டு வரும் பயணத்தில் சவால்கள், அதை சந்திக்கும் சவால்கள் அனைத்தும் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்படும்.

8 வழிச்சாலை திட்டம்
எட்டு வழி சாலைக்கு எதிராக போராடியோர் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படும். அது போல் விவசாய சட்டங்கள், சி.ஏ.ஏ.க்கு எதிராக போராடியோர் மீதான வழக்குகளும் வாபஸ் பெறப்படும். மீத்தேன், நியூட்ரினோவை எதிர்த்து போராடியவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படும்.

100 கோடி ரூபாய்
தமிழகத்தில் உள்ள கோவில்களை புனரமைக்க 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். சமத்துவபுரம் சீரமைக்கப்படும்; புதிய சமத்துவபுரங்கள் அமைக்கப்படும். . கொரோனாவுக்கு பிந்தைய சிகிச்சை - அரசு மருத்துவமனைகளில் சிறப்பு மையங்கள் அமைக்கப்படும் .

ஆக்ஸிஜன் இல்லை
தடுப்பூசி இல்லை, ஆக்சிஜன் இல்லை என்ற சூழலில் தான் ஆட்சிக்கு வந்தோம்; தற்போது இல்லை என்ற சூழலே இல்லாத நிலையை உருவாக்கியுள்ளோம். 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' என்பது போல் கடந்த அதிமுக அரசு மே மாதம் வரை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மறந்துவிட்டது.

பத்திரிகை
கருத்து சுதந்திரங்களை பறிக்கும் வகையில் கடந்த ஆட்சியில் பத்திரிகையாளர்கள் மீதான வழக்குகளும் வாபஸ் பெறப்படும். என் மீது சொல்லப்பட்ட பழிகள், அவமானங்கள் மேலும் உழைக்க உந்துகின்றன; தலைவரின் மகன் என நான் பகட்டு காட்டியதில்லை என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications