கொங்கு மண்டலத்திற்கு ‘மாஸ்’ பிளான்: செந்தில் பாலாஜி இடத்திற்கு 3 முக்கிய புள்ளிகளை இறக்கிய ஸ்டாலின்!
சென்னை: கொங்கு மண்டலத்தில் திமுகவுக்கு பெரும் பலமாக கடந்த தேர்தல்களில் இருந்த செந்தில் பாலாஜி தற்போது களத்தில் இல்லாத சூழலில், 3 முக்கிய புள்ளிகளை கொங்கு மண்டலத்திற்கு அனுப்பியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுகவிற்கு கொங்கு மண்டலம் சாதகமான பகுதியாக இருந்ததில்லை என்றே கூறலாம். 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்த போதும் கொங்கு மண்டலத்தில் பெரும்பாலான சட்டமன்றத் தொகுதிகளை அதிமுகவே வென்றது.

கொங்கு மண்டல அரசியல்: எடப்பாடி பழனிசாமி கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர், கொங்கு மண்டலத்தில் பெரும்பான்மையாக உள்ள சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதும் ஒரு காரணம். எடப்பாடி பழனிசாமியால் மட்டும்தான் அதிமுகவுக்கு கொங்கு மண்டலத்தில் செல்வாக்கா என்றால் இல்லை, எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் தலைமைப் பொறுப்பிற்கு வருவதற்கு முன்பு ஜெயலலிதா காலத்திலும் கொங்கு மண்டலம் அதிமுகவுக்கே வெற்றிக் கனிகளை அளித்துள்ளது.
கொங்கு மண்டலத்தில் திமுகவின் கொடி தாழ்வாகவே பறந்த நிலையில், அதைச் சரி செய்வதற்காக திமுக கையில் எடுத்த ஆயுதம் தான் செந்தில் பாலாஜி. 2018ல் செந்தில் பாலாஜி திமுகவில் சேர்ந்தார். அதைத்தொடர்ந்து கொங்கு மண்டலத்தில் திமுகவை எழுச்சி பெறச் செய்வதற்கான பல்வேறு வேலைகளைச் செய்தார் செந்தில் பாலாஜி.
செந்தில் பாலாஜி வருகையால் திமுக எழுச்சி: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவையில் திமுக மிகப்பெரிய வெற்றியைப் பெற்று, அதிமுகவின் கோட்டையை தகர்த்து விட்டோம் எனச் சூளுரைத்தது. அதைத்தொடர்ந்து, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலிலும் திமுக கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தார் செந்தில் பாலாஜி. கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலத்திலும், கரூரிலும் திமுகவுக்கு ஒரு வலுவான பிடியை கொடுத்தார்.
2016 சட்டமன்றத் தேர்தலில் கரூர் மாவட்டத்தில் உள்ள 4 எம்.எல்.ஏ தொகுதிகளில் ஒன்றில் மட்டும் தான் திமுக வென்றிருந்தது. ஆனால், 2021ல் மொத்தமுள்ள 4 தொகுதிகளிலும் திமுகவை வெற்றி பெற வைத்தார் செந்தில் பாலாஜி. முன்னதாக 2019 லோக்சபா தேர்தலில் கரூர் தொகுதியில் ஜோதிமணியை நல்ல வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார்.
செந்தில் பாலாஜி இடத்தில் யார்?: கரூர், கோவை பகுதியில் திமுகவை வளர்த்தெடுத்து வந்தார் செந்தில் பாலாஜி. 2024 லோக்சபா தேர்தலிலும் செந்தில் பாலாஜியை வைத்து கொங்கு மண்டலத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற ஸ்டாலின் திட்டமிட்டிருந்த சூழலில் தான் 2023 ஜூனில் அவர் கைது செய்யப்பட்டார். இதனால், கொங்கு மண்டலத்தில் திமுகவை வளர்த்தெடுக்கப் போவது யார் என்ற பெரிய கேள்வி எழுந்தது.
3 புள்ளிகள்: இந்நிலையில், கொங்கு மண்டத்திற்கு பணியாற்ற திமுகவில் ஆட்களை நியமித்துள்ளார் ஸ்டாலின். கரூரில் ராஜ்யசபா எம்.பி எம்.எம். அப்துல்லாவை நியமித்துள்ளனர். எம்.எம்.அப்துல்லா ராஜ்யசபா எம்.பி தான் என்றாலும் பல தேர்தல்களை நெருக்கமாகப் பார்த்தவர். தேர்தல் பணிகளில் தீவிரமாகப் பங்கெடுத்தவர்.
அப்துல்லா: புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் திமுக வெல்வதற்கு பெரிய காரணமாக இருந்தவர். 2021 சட்டசபை தேர்தலில் திமுகவில் புதுக்கோட்டை சிட்டிங் எம்.எல்.ஏ பெரியண்ணன் அரசுக்கு வாய்ப்பளிக்காமல் புதுமுகம் முத்துராஜாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதிமுகவில் கார்த்திக் தொண்டைமான் என்ற வலுவான வேட்பாளர் களத்தில் இறக்கப்பட்டார்.
இப்படிப்பட்ட சூழலில் முத்துராஜா அந்த தேர்தலில் வெல்ல காரணமாக இருந்தவர் புதுக்கோட்டை தொகுதி தேர்தல் பொறுப்பாளராகச் செயல்பட்ட முத்துராஜா. அதுமட்டுமின்றி, உதயநிதி ஸ்டாலின், 2019 லோக்சபா தேர்தலில் தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்ட போது அவருக்கு உறுதுணையாகத் திகழ்ந்தவர் அப்துல்லா.
இப்போது, கரூர் தொகுதிக்கு பொறுப்பாளராக அப்துல்லா நியமிக்கப்பட்டுள்ளார். முன்பு திமுகவுக்கு சாதகமாக இருந்திராத கரூர், செந்தில் பாலாஜி வருகைக்குப் பின்னர் தான் மாறியது. இப்போது செந்தில் பாலாஜி களத்தில் இல்லாத சூழலில் திமுகவின் வெற்றியை நிலைநிறுத்துவதற்காக அப்துல்லா களமிறக்கப்பட்டுள்ளார்.
டிஆர்பி ராஜா: கோவை தொகுதி பொறுப்பாளராக தொழில்துறை அமைச்சரும், திமுக ஐடி விங் செயலாளருமான டிஆர்பி ராஜா நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்டாலின் நம்பிக் கொடுக்கும் பணிகளை திறம்படச் செய்து பாராட்டு பெறுவதில் வல்லவரான டிஆர்பி ராஜாவுக்கு இப்போது இந்த முக்கியமான பணியை கொடுத்திருக்கிறார் ஸ்டாலின். திமுக இந்த முறை நேரடியாக போட்டியிடும் தொகுதியான கோவையில் டிஆர்பி ராஜா களமிறக்கப்பட்டதும் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
சூறாவளி.. அடுத்த 2 நாளில் ஆட்டத்தை தொடங்கும் முதல்வர் ஸ்டாலின்.. 40 தொகுதிகளுக்கும் சுற்றுப்பயணம்!
சக்கரபாணி: செந்தில் பாலாஜி கூடுதலாக கவனித்த பொள்ளாச்சி தொகுதியின் பொறுப்பாளராக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி நியமிக்கப்பட்டுள்ளார். அர.சக்கரபாணி, 1996ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக 6 முறை ஒட்டன்சத்திரம் தொகுதியில் வென்று, ஒட்டன்சத்திரத்தை திமுக கோட்டையாக கட்டி எழுப்பி இருப்பவர். கடந்த 2016 சட்டசபை தேர்தலில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்குப் பிறகு, அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் சக்கரபாணி. அவரைத்தான் பொள்ளாச்சி தொகுதி பொறுப்பாளராக நியமித்துள்ளார் ஸ்டாலின்.
செந்தில் பாலாஜி களத்தில் இல்லாத சூழலில், அவரது இடத்தை நிரப்பி திமுகவுக்கு தோள் கொடுக்கப்போவது யார் என்ற மிகப்பெரிய கேள்வி திமுகவினர் மட்டுமல்லாது ஒட்டுமொத்த அரசியல் அரங்கிலும் எழுந்து இருந்த சூழலில் அந்த இடத்திற்கு 3 முக்கியமான ஆட்களை அனுப்பி வைத்துள்ளார் ஸ்டாலின். முதல்வர் ஸ்டாலினின் இந்த திட்டம் திமுகவுக்கும், கூட்டணி கட்சிகளுக்கும் எந்த அளவுக்கு இந்த லோக்சபா தேர்தலில் கைகொடுக்கப் போகிறது என்பதை லோக்சபா தேர்தல் முடிவுகளில் பார்க்கலாம்.
-
6 சீட் கேட்டு அடம் பிடிக்கும் மார்க்சிஸ்ட்.. 5ல் உறுதியாக ஸ்டாலின்! இன்று திமுகவுடன் மீண்டும் பேச்சு -
உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி? தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் குழப்பம்! புதுச்சேரியில் பரபர -
Duraimurugan: தவாக வேல்முருகன் விலகியது குறித்த கேள்விக்கு! துரைமுருகனின் face expression-ஐ பாருங்க -
திமுக கூட்டணியில் 3 சீட் கேட்டுள்ளோம்.. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவோம்- எஸ்டிபிஐ தலைவர் தகவல் -
திருவாடானை தொகுதியில் களமிறங்கும் திமுக? MLA சீட் ரேஸில் யார்? -
கடலூர் மண்ணின் மைந்தன் திருமால்வளவன் அந்த வீடியோ! வேல்முருகன் திமுக-பாமக கோட்டை தகர்க்க பிளான் -
Election Exclusive: கூட்டணியில் ’சிவப்பு’ சிக்னல்.. தோழர்களை கூலாய் ஹேண்டில் செய்யும் ஸ்டாலின்! பரபரப்புக்களுக்கு எண்ட்! -
வேல்முருகன் குறிவைக்கும் 'அந்த' 3 தொகுதிகள்! பாமக கோட்டையைக் கைப்பற்றத் துடிக்கும் தவாக! -
திமுகவில் அடுத்த விக்கெட்? காங்கிரசுக்கு தந்த சீட்டால் வினை.. தமிழகத்தில் கனவாகும் ஸ்வீப் சக்சஸ் -
5 தொகுதிகளுக்கு சரி.. ஆனால் சென்னையில் 2 தொகுதிகள் கொடுங்க.. திமுகவுக்கு சிபிஎம் விதித்த நிபந்தனை! -
சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் இல்லை? காங்கிரஸில் புது பஞ்சாயத்து! அப்போ செல்வப்பெருந்தகைக்கு? -
மதிமுக - இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் விரும்பும் தொகுதிகள் எது? திமுக கையில் முடிவு.. இதோ லிஸ்ட்












Click it and Unblock the Notifications