Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கனிமொழி கொடுத்த ஃபைலை ‘டிக்’ அடித்த ஸ்டாலின்! முக்கிய பதவி பெற்ற ரத்னா! ‘ஃப்ரீஹேண்ட்’ மகளிரணி ஹேப்பி

Subscribe to Oneindia Tamil

சென்னை : திமுக மகளிரணி நிர்வாகிகள் நியமனத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழியின் பரிந்துரைகள் அப்படியே தலைமையால் ஏற்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தினர். கனிமொழி கொடுத்த ஃபைல் அப்படியே, நியமனமாக மாறி இருக்கிறதாம்.

திமுக துணை பொதுச் செயலாளராக கனிமொழி கருணாநிதி நியமிக்கப்பட்டு ஒன்றரை மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், இன்று மகளிர் அணி நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

கனிமொழி கருணாநிதி வகித்து வந்த திமுக மகளிரணி செயலாளர் பதவிக்கு ஹெலன் டேவிட்சன், மகளிரணி தலைவராக விஜயா தாயன்பன், ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், திமுக இளைஞரணி நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர். இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இளைஞரணி துணை செயலாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

திமுக பொறுப்புகள்

திமுக பொறுப்புகள்

திமுகவின் 15 வது உட்கட்சித் தேர்தல் சமீபத்தில் நடைபெற்று முடிந்து, கிளை, ஒன்றிய, பேரூர், நகர, வட்ட, மாவட்டச் செயலாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகியோர் கடந்த அக்டோபர் 9ஆம் தேதி நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இரண்டாவது முறையாக முக ஸ்டாலின் போட்டியின்றி தலைவரானார். திமுகவின் 5 துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவரான சுப்புலட்சுமி ஜெகதீசன் கடந்த செப்டம்பர் மாதம் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.

மகளிரணி - துணை பொதுச் செயலாளர்

மகளிரணி - துணை பொதுச் செயலாளர்

இதைத்தொடர்ந்து, திமுக துணைப் பொதுச் செயலாளர் பதவிக்கான மகளிர் பிரதிநிதித்துவ அடிப்படையில், திமுக மகளிரணி செயலாளரான கனிமொழி எம்.பி, துணை பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். கனிமொழியே, மகளிர் அணியையும் மேற்பார்வை செய்வார் என அப்போது கூறப்பட்டது. அந்த உத்தரவாதத்தின் அடிப்படையிலேயே அவர் திமுக துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டதாக மகளிரணியினர் மத்தியில் பேசப்பட்டது.

 2 பொறுப்பில் இருக்க வேண்டாம்

2 பொறுப்பில் இருக்க வேண்டாம்

எனினும், 2 பொறுப்புகளில் இருப்பதை கனிமொழியே விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், மகளிரணிக்கு புதிய நிர்வாகியை தேர்ந்தெடுக்கும் வரை மட்டும் மகளிர் அணி பொறுப்பையும் கவனித்துக் கொள்கிறேன், விரைவில் பொறுப்பாளர்களை நியமித்து விடலாம் என கனிமொழியே திமுக தலைவர் ஸ்டாலினிடம் கூறினாராம். இதையடுத்து, மகளிரணி செயலாளராக அடுத்து யாரை நியமிப்பது என கனிமொழியிடமே திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு அவர் ஒரிரு பெயர்களை பரிந்துரை செய்ததாக அப்போது அறிவாலய வட்டாரத்தில் பேசப்பட்டது.

கனிமொழியின் பரிந்துரை

கனிமொழியின் பரிந்துரை

திமுக மகளிர் அணி செயலாளராக வர வாய்ப்பிருப்பவர்கள் என முக்கியமாக 3 பேரின் பெயர்கள் அடிபட்டன. ஹெலன் டேவிட்சன், தமிழரசி ரவிக்குமார், தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோரின் பெயர்கள் தான் மேஜராக பேசப்பட்டன. அதில் கனிமொழிக்கு மிகவும் நெருக்கமான கன்னியாகுமரி முன்னாள் எம்.பியான ஹெலன் டேவிட்சன் தான் இந்த பட்டியலில் முன்னணியில் இருந்தார். அவரையே கனிமொழி, பரிந்துரை செய்ததாக கூறப்பட்டது. தற்போது, அவரே மகளிரணி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மகளிர் அணி நியமனத்திற்கு கனிமொழி கொடுத்த பட்டியல் அப்படியே ஸ்டாலினால் ‘டிக்' அடிக்கப்பட்டதாம்.

கனிமொழியால் வளர்ந்த அணி

கனிமொழியால் வளர்ந்த அணி

திமுகவில் மகளிர் அணி புத்துயிர் பெற்றதே கனிமொழியின் நியமனத்திற்குப் பின்னர் தான். தான் பார்த்துப் பார்த்து கூட்டங்கள் நடத்தி வளர்த்தெடுத்த மகளிர் அணி தனது கையை விட்டுப் போவதை கனிமொழியே அரைமனதோடு தான் ஏற்றுக்கொண்டார் கனிமொழி. எப்போதும், தனக்கு நெருக்கமாகவே இருக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே தனது நம்பிக்கைக்குரியவரான ஹெலன் டேவிட்சனை செயலாளர் பொறுப்புக்கு கொண்டு வந்திருக்கிறார் கனிமொழி. மாநில மகளிர் தொண்டரணி செயலாளராக பொறுப்பு வகித்து வந்த ஹெலன் டேவிட்சன் மகளிரணி செயலாளர் ஆகியிருக்கிறார்.

கனிமொழி கைவண்ணம்

கனிமொழி கைவண்ணம்

மேலும், மகளிர் அணி தலைவராக விஜயா தாயன்பன் நியமிக்கப்பட்டுள்ளார். இணைச் செயலாளராக குமரி விஜயகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மகளிர் அணி துணைச் செயலாளர்களாக பவானி ராஜேந்திரன், அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், மகளிர் தொண்டர் அணி செயலாளராக நாமக்கல் ராணி, மகளிர் தொண்டர் அணி இணை செயலாளராக தமிழரசி ரவிக்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மகளிர் அணிக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்கள் அனைவருமே கனிமொழியின் பரிந்துரையால் தான் பதவிகளைப் பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது.

அப்படியே டிக்

அப்படியே டிக்

ஒவ்வொரு பதவிக்கும் கனிமொழி கொடுத்த பரிந்துரையை திமுக தலைவர் ஸ்டாலின் அப்படியே டிக் அடித்திருப்பதாகவும், எந்தவொரு மாற்றமும் செய்யவில்லை என்றும் அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மகளிர் அணியின் அனைத்து பொறுப்புகளிலும் கனிமொழிக்கு நெருக்கமானவர்களே நியமிக்கப்பட்டுள்ளனர். மகளிர் அணி சமூக வலைதள பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் பி.எம்.யாழினி, ரத்னா லோகேஸ்வரன், ரியா ஆகியோரும் கனிமொழியின் சாய்ஸ் தானாம். என்.ஆர்.ஐ விங் மாநில துணை செயலாளராக இருந்த டாக்டர் யாழினி, கனிமொழியின் கண்ணசைவால், மகளிர் அணி சமூக வலைதள பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கனிமொழி பாராட்டிய கவுன்சிலர்

கனிமொழி பாராட்டிய கவுன்சிலர்

சமீபத்தில் சென்னை பெருமழையின்போது திமுகவைச் சேர்ந்த 128வது வார்டு பெண் கவுன்சிலர் ரத்னா லோகேஸ்வரன் ரெயின் கோட் அணிந்துகொண்டு கொட்டும் மழையில் மக்களைச் சந்தித்து தேங்கிய தண்ணீரை உடனே அகற்றிவிடுகிறோம் என்று நம்பிக்கை கொடுத்து, விடிய விடிய அந்தப் பகுதிகளிலேயே இருந்து தண்ணீரை அகற்றும் பணியை மேற்பார்வை செய்தார். இதுகுறித்து சமூக வலைதளங்கள் மூலம் தகவல் அறிந்த கனிமொழி, "பெருமையாக இருக்கிறது ரத்னா" என ட்விட்டரில் பதிவு செய்திருந்தார். அவரையே இன்று மகளிர் அணியில் முக்கிய பொறுப்புக்கு கொண்டு வந்திருக்கிறார் கனிமொழி.

 ஓங்கும் கை

ஓங்கும் கை

மகளிர் அணி செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டாலும், அந்தப் பிரிவு தமது கைக்குள்ளேயே இருக்கும் வகையில், கனிமொழி பரிந்துரைகளைச் செய்தார். அதை தலைமை அப்படியே ஏற்றுக்கொண்டிருப்பதன் மூலம், கனிமொழிக்கு உரிய கௌரவம் வழங்கி, அவருக்கு மகளிரணி விவகாரத்தில் முழு சுதந்திரம் இருப்பதை உறுதி செய்துள்ளது. இதன் மூலம் திமுக தலைவர் ஸ்டாலின் கனிமொழிக்கு உரிய மரியாதை செய்துள்ளதாகவும், வரும் காலங்களிலும் மகளிரணியில் பெண்கள் பலர் ஆர்வத்தோடு இணைவார்கள் என்றும் உற்சாகமாகக் கூறுகிறார்கள் மகளிர் அணியினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+