முஸ்லீம்களுக்கு கபர்ஸ்தான்! கிறிஸ்துவர்களுக்கு கல்லறைத் தோட்டம்! ஸ்டாலின் கொடுத்த முக்கிய உறுதி!
சென்னை: முஸ்லீம்கள் இறந்தால் அடக்கம் செய்யப்படும் கபர்ஸ்தான் குறித்தும், கிறிஸ்துவர்கள் இறந்தால் அடக்கம் செய்யப்படும் கல்லறைத் தோட்டம் பற்றியும் முதலமைச்சர் ஸ்டாலின் முக்கிய உறுதி ஒன்றை இன்று கொடுத்துள்ளார்.
அதாவது கிறித்தவர்களுக்கான கல்லறைத் தோட்டங்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கான கபர்ஸ்தான் இல்லாத மாவட்டத் தலைநகரங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டு, மாநகராட்சி/நகராட்சி சார்பில் கல்லறைத் தோட்டம் / கபர்ஸ்தான் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற சிறுபான்மையினர் நலன் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துக்கொண்டு பேசிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்ல இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் மேலும் பேசியதாவது;
• கிறித்துவக் கல்லறைகளில் மீண்டும் ஒரு உடலை அடக்கம் செய்வதற்கு தற்போதுள்ள விதிகளைத் தளர்த்தி சவப்பெட்டியில்லாமல் புதைக்கப்பட்ட இடத்தில், 12 மாதங்களுக்குப் பிறகு வேறு ஒருவரின் சடலத்தைப் புதைக்க அனுமதி அளிக்கும் ஆணையையும்;
*மரத்தினால் செய்யப்பட்ட சவப்பெட்டியில் புதைக்கப்பட்ட இடத்தில் 18 மாதங்களுக்குப் பிறகு அதே குடும்பத்தைச் சேர்ந்த வேறு ஒருவரின் சடலத்தைப் புதைக்க அனுமதி அளிக்கும் ஆணையையும்;
*உலோகத்தினால் செய்யப்பட்ட சவப்பெட்டியில் புதைக்கப்பட்ட இடத்தில், ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு அதே குடும்பதைச் சேர்ந்த வேறு ஒருவரின் சடலத்தைப் புதைக்க அனுமதி அளிக்கும் ஆணையையும்;
*சென்னை கீழ்ப்பாக்கத்திலுள்ள கிறித்துவக் கல்லைறையில் இருப்பதைப் போன்று உடல்களை அடுக்ககப் பெட்டகங்களில் அடக்கம் செய்ய அனுமதியளிக்கும் ஆணையையும் இந்த வார இறுதிக்குள்ளாக வெளியிடப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் புதிய விதி, தமிழகத்திலுள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகியவற்றில் உள்ள கிறித்துவக் கல்லைறைகளுக்குப் பொருந்தும்.
*கிறித்தவர்களுக்கான கல்லறைத் தோட்டங்கள், இஸ்லாமியர்களுக்கான கபர்ஸ்தான் இல்லாத மாவட்டத் தலைநகரங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டு, மாநகராட்சி/நகராட்சி சார்பில் கல்லறைத் தோட்டம் / கபர்ஸ்தான் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
• உபதேசியர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்கள் பதிவு செய்வதற்கான நிபந்தனைகள் தளர்வு செய்யப்பட்டு, அது இம்மாத இறுதிக்குள் தொடங்கப்படும்.
• கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து சான்றிதழ் பெறுவதற்கு இணைய வழியில் விண்ணப்பித்து சான்றிதழ் பெற்றுக் கொள்வதற்கான Web Portal இந்த மாதத்திற்குள் நடைமுறைக்குக் கொண்டுவரப்படும்.
• கிறித்துவர்கள் ஜெருசலேம் புனிதப் பயணம் செல்வதற்கு அரசு நிதியுதவி வழங்குவதற்கு திருத்தியமைக்கப்பட்ட வழிமுறைகளும் (Revised Guidelines) இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும்.
•மாநில அரசால் கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மதசார்பு சிறுபான்மையினர் (Religious Minority) அந்தஸ்து சான்றிதழ் தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இனிவருங்காலங்களில் இச்சான்றிதழ் காலம் குறிப்பிடப்படாமல் நிரந்தர சான்றிதழாக வழங்கப்படும்.
உங்களது அனைத்துக் கோரிக்கைகளையும் கேட்க திறந்த மனத்தோடு இருக்கிறேன்.திராவிட மாடல் அரசின் இந்தப் பணித் தொய்வின்றித் தொடரும் என்று கூறி, அதற்கு உங்களது ஒத்துழைப்பினைத் தொடர்ந்து தாருங்கள் எனக் கேட்டு விடைபெறுகிறேன்.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications